அனைவருக்கும் இதில் பொறுப்பு உண்டு !!! posted byM.S.Kaja Mahlari (Singapore)[27 August 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29732
நமதூரில் தற்போது நடைபெற்றுவரும் திருமணங்கள் பெரும்பாலும் ரோட்டில்தான் நடைபெறுகிறது . அவ்வாறு நடைபெறும் போது ரோட்டின் இருபக்கமோ , பலபக்கமோ அடைத்து , நிகாஹ் மஜ்லிஸ், வலீமா விருந்து , பெண் ஜோடிப்பு, கைபிடித்துவிடல் ,தாலிகட்டு போன்ற நிகழ்சிகள் நடைபெறுகிறது .
ரோட்டில் நடைபெருவதர்க்கான காரணம் தற்போது முன்னைய காலங்களை போல் வெட்டைகள் இல்லை . எல்லாமே வீடுகளாக ஆகிவிட்டது என்ற காரணங்கள் கூறப்படுகிறது .
இவைகள் முற்றிலும் உண்மையே ! அதே நேரத்தில் பள்ளிகளில் இவ்வித நிகழ்சிகள் அனைத்தையும் நடத்த முடியாது . அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் !
நிகாஹ் நிகழ்ச்சியை வைக்கலாம் , வலீமா விருந்துகளை வைக்கலாம் . எல்லாப் பள்ளிகளிலும் விசாலமான இடவசதி இருக்கும் என சொல்லமுடியாது .
அடுத்து பள்ளிவாசலில் இவ்வித நிகழ்சிகள் வைக்கும்போது பள்ளிக்குரிய (ஹுர்மத் ) கண்ணியங்கள் பேணப்பட வேண்டும்.
உள்பள்ளியில் வைக்கும்போது இன்னும் கவனமாக அதன் ஒழுங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் .
நிகாஹ் மஜ்லிஸ் நடக்கிறது என அங்கு ஊர் பலாயிகளை, சிரிப்பு, தமாஸ்களை பேசிக்கொண்டு இருக்கக்கூடாது !
உள்பள்ளி (வக்ப்) ,வெளிபள்ளி (வக்ப் அல்லாத ) என்ற அழகிய முறையை நமதூரில் செயல்படுத்தியது சரஹுப்புலி , மாதிஹுர்ரசூல் அல்லாமா அஸ் செய்கு சதகதுல்லாஹ் அப்பா காஹிரி அவர்கள்தான் என்பது வரலாற்று உண்மையாகும் !
நிகாஹ் மஜ்லிஸ் பள்ளிவாசலில் வைத்து நடத்துவது சுன்னத் வழிமுறைதான்! ஆனால் பள்ளிவாசலின் கண்ணியங்கள்
பேனப்படும்போதுதான் அந்த சுன்னத் செயல்படும்
அதற்கு மாறாக இருந்தால் பள்ளியைவிட மற்றைய இடங்கள்தான் (ரோடு , மண்டபம், இதரவை) சிறந்தது .
ஆனால் வருங்காலங்களில் இன்னும் இட நெருக்கடி ஏற்படுவது உண்மை ! ஆகவே ! ரோட்டில் தான் நமது நிகழ்ச்சிளை நடத்த வேண்டும் என நினைப்பவர்கள் பாதைக்குரிய உரிமையை கண்டிப்பாக பேண வேண்டும் !! இதில் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக்கொள்ள வேண்டும் !
எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய பேனுதல்களை நம் யாவருக்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross