எனது ஆரம்ப பாடசாலை நாட்களில், நாடோடி ஒருவர் இரண்டு விரல்களில் மாட்டப்பட்ட கட்டைகளின் வழியாக ஒரு வினோத சப்தத்தை எழுப்பி, இந்தப் பாடலை, விவரிக்க முடியாத வித்தியாசமான குரலில் கணீரென்று தெரு வழியாகப் பாடி வருவார்....
யாரிடமும் வாய் திறந்து யாசகம் கேட்பதில்லை எனினும், கொடுப்பது எதுவானாலும் ஏற்றுக் கொள்வார்....
எனது குழந்தை மனதில் இனம் புரியாத ஒரு கேள்வி?
இரவல் என்றால் என்ன? மீண்டும் அவரது மந்திரக்
குரலில் பாடல் தொடர்கிறது....
"கண்ணாலே கண்ட கருத்தக்
கோழியும் இரவல்...."
வாப்பா அவர்கள் வரும் வரைக் காத்திருந்து
எனது சந்தேகத்தை எழுப்பினேன்.... இரவல் என்ற ஒரு வார்த்தைக்கு எனது வாப்பா தந்த விளக்கம் அரைமணி நேரத்திற்கும் மேலிருக்கும்... இன்றும் அந்தக் கந்தர்வக் குரல் எனது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...
இதை நான் இங்கு குறிப்பிடக் காரணம், குரலும் இசையும் சேர்ந்த
கம்பீரம், காதுக்குள் செல்லாமலேயே இதயத்தைத் தாக்கும் வலிமை கொண்டது.... அந்த வலிமையை, தனது எழுத்தின் ஆளுமையால், நமக்கு எளிமையாகத் தந்துள்ள பஷீர் பாராட்டுக்குரியவர்....
காயல் மாநகரம் கண்ட நல்ல பல எழுத்தாளர்களின் அணிவகுப்பில், நண்பர் பஷீருக்கு முன் வரிசையில் இடம் உண்டு!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross