இசை இல்லா பாடல்கள்தான் மனதின் ஒலி posted byNIZAR (KAYALPATNAM)[28 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29786
சலிப்பு தட்டாத கட்டுரைகளை வழங்கிவரும் எழுத்தாளர் சாளை பசீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களுடைய கட்டுரையில் இசையுடன் கூடிய பாடல்களையும், இசையில்லாத வெறும் ராகத்துடன் படிக்கும் அரபி பைத்துகளையும் பிரித்து சொல்லாமல் மொத்தத்தில் இசையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.
உங்கள் மனதை கொள்ளை அடித்த குரான், பாங்கு, அரபி பைத்கள், நாத்கள், தப்சு போன்றவற்றையும் இசை என்று என்று சொல்லி உள்ளீர்கள். இதை எப்படி இசை என்ற வடிவத்தில் எடுக்க முடியும் என்று தெரியவில்லை. இசை இஸ்லாத்தில் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கும்பொழுது இரண்டையும் ஒன்றாக கலந்து மனதின் ஒலி எப்படி எடுத்து கொள்ள முடியும் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை.
இசையோடு கூடிய பாடல்கள் நிச்சயமாக இசை இல்லாத பாடல்களோடு ஒப்பிடும்பொழுது மனதை மயக்குவதிலும்,
இனிமையாக வருடுவதிலும் இசை பாடல்கல்தான் முன்னே இருக்கின்றன. அதே நேரத்தில் இசையில்லாத குரான்,
பாங்கு, மற்ற அரபி மற்றும் இஸ்லாமிய தமிழ் பாடல்களின் போக்கு மார்க்க அடிப்படையில் ஒரு டச்சிங் ஏற்பட்டு மனதை மயக்கும் அல்லது வருடும் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் நீங்கள் சொல்லிய அனைத்தும் மனதின் ஒலி என்றாலும் இசையோடு கூடிய பாடல்களோடு ஒரு போதும் இசை இல்லாதவற்றை இணைக்க முடியாது என்று என் சிறிய அறிவுக்கு உட்பட்டு சொல்கிறேன். தவறுகள் சுட்டிக்காட்ட பட்டால் திருத்தி கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross