Re:... முன்னுரிமை பிரச்சினை posted byசாளை பஷீர் (மண்ணடி , சென்னை)[29 August 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 29848
சுவாரசியமான அதே சமயம் சீரியஸான கட்டுரை.
ஷூஅய்ப் காக்காவின் கட்டுரையை வாசிப்பதற்கு சற்று முன்னதாக நான் வாசித்த நூலிலிருந்து ஹஜ் & உம்ரா தொடர்பான மக்களின் மன நிலை குறித்து எழுதப்பட்டிருந்த வரிகள் :
ஒவ்வொரு வருடமும் ரமழான் மற்றும் ஏனைய காலங்களில் உபரியாக உம்ராவை நிறைவேற்றும் மில்லியன் கணக்கானவர்களைக் காண முடிகின்றது.
10 வது தடவை 20 வது தடவை என ஹஜ்செய்வோரும் உள்ளனர். இந்த நபிலான வணக்கங்களில் அவர்கள் செலவிடும் தொகை ஒன்று திரட்டப்பட்டால் பல ஆயிரம் மில்லியன் மக்களுக்கு போதுமானதாக அமையும்.
இஸ்லாமியப் பொது நலப் பணி மன்றத்திற்காக 1000 மில்லியன் டொலர் பணம் சேர்ப்பதற்கு பல வருடங்கள் நாம் அலைந்தும் இத்தொகையில் 1/10 பங்கையே எம்மால் பெற்றுக் கொள்ள முடியதாக இருக்கின்றது. சில வேளைகளில் இந்த பங்கில் அரைவாசியையோ அல்லது 1/3 பங்கையோ கூட சேர்த்துக் கொள்ள முடியாமல் போவதுண்டு.
இவ்வாறு ஹஜ்ஜையும் உம்ராவையும் மேலதிகமாக செய்பவர்களிடம் உபரியான உங்கள் பயணத்திற்கு செலவிடும் தொகையை ஆசியாவிலும் , ஆபிரிக்காவிலும் இடம் பெறும் கிறிஸ்தவ அல்லது கம்யூனிச பிரச்சாரத்திற்கு எதிராகவோ அல்லது அப்பிரதெசங்களின் பட்டினியை போக்கவோ செலவு செய்யுங்கள் என்று சொன்னால் உங்களது இந்த அழைப்பிற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள்.
உளவியல் வைத்தியர்களாலேயே குணப்படுத்த முடியாத நோய் என சலித்துப் போன காலம் கடந்த நோய் இது.
ஹுஸைன் {றழீ} அவர்களின் இரத்தம் ஓட்டப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஈயின் இரத்தம் தொடர்பான பிக்ஹ் நிலைப்பாடு பற்றி கேட்கப்படுகின்றது.
மக்கள் பர்ளையே தொலைத்து நிற்கும்போது நபிலான ஒரு அம்சத்துக்காக நாம் ஒரு யுத்தத்தையே தொடுத்து விடுவதுண்டு.
பொதுவாக முஸ்லிம்களின் நிலை இதுதான்.
நூல் : இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்வமைப்பு . ஆசிரியர் : யூஸுஃப் அல் கர்ளாவி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross