காயல்பட்டினத்துக்கு பெருமை posted bymackie noohuthambi (kayalpatnam)[30 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29861
நமது நகரமன்ற தலைவிக்கு ஒரு பெருமை அது நமது ஊருக்கு கிடைத்த பெருமை. காய்தல் உவத்தல் இன்றி அனைவரும் அவரை வாழ்த்துக் கூறி வழி அனுப்ப வேண்டும்.
ஆபிதா அவர்களுக்கு இந்த செய்தி ஒரு மன வலிமையை தரும் செய்தி. வேறு சிலருக்கு மன வலியை தரும் செய்தி. அமெரிக்கா செல்வதற்கு கடவு சீட்டு, பொருளாதாரம். விசா இவை இருந்தால் போதும், சாமானிய மனிதர்களும் போய் விட்டு வரலாம். இதை ஒரு பெரிய செய்தியாக இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டுமா என்று கூட சிலர் நினைக்கலாம்.
யார் அழைத்தார்கள் என்பது இங்கு முக்கியமல்ல ஏன் அழைத்தார்கள் என்பதுதான் முக்கியம். பிரதமர் வேட்பாளாராக அடையாளம் காணப்பட்டு இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒருவருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வரும் வேளையில், இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் ஓர் சாதாரண நகராட்சி தலைவிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தனது ஆட்சி காலத்தில் எந்த சாதனையும் நிகழ்த்த முடியாமல் திக்கு தெரியாத காட்டில் திசை மாறி செல்லும் பறவை போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவிக்கு -அந்த குறை தலைவியால் ஏற்பட்டதா அல்லது உறுப்பினர்கள் அதிகாரிகள் ஒத்துழைப்பு இன்மையால் ஏற்பட்டதா - என்பது ஒரு விவாத பொருளாக பார்க்கப்படும் வேளையில் இப்படி ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது. தலைவி அவர்கள் தனக்கு அல்லாஹ் அருளிய ஒரு தனிப் பெரும் செல்வாக்கு என்று இதனை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, தன பயணத்தை தொடங்குங்கள்.
அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்று தன்னை பறை சாற்றிக் கொண்டாலும் அதன் சரித்திரம் இரத்த கறை படிந்தது என்பதற்கு ஹிரோஷீமா நாகசாக்கி மட்டுமல்ல தற்காலத்தில் அது வெறிகொண்டு ஆடிய ஆட்டங்கள் ஆப்கானிஸ்தானிலும். ஈராக்கிலும் இப்போது சிரியாவிலும் அது தனது நாச கரங்களை வைத்து கீறிப் பார்க்கும் மனித நேயமற்ற செயல்களையும் நம்மால் நியாயப்படுத்தி பார்க்க முடியவில்லை.
தாங்கள் நகரமன்ற தலைவி என்ற முறையில் அமெரிக்க நாட்டில் நகர் மன்றங்கள் செயல்படும் முறையை அறிந்து வந்து அதை இங்கேயும் செயல்படுத்த ஆவன செய்யுங்கள். எங்கெல்லாம் உங்களுக்கு அங்கு பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு இந்த அமெரிக்கா செய்து வரும் துரோகங்களை வெளிச்சம் போட்டு காட்ட தயங்காதீர்கள்.
CHANCE COMES, BUT ONCE. நல்ல முறையில் உங்கள் பேச்சாற்றலை அங்கு வெளிப் படுத்துங்கள்.
மனிதன் என்ற வகையில் உங்களிடம் சில குறைகள் இருப்பதை மாற்று அணியில் இருப்பவர்கள் சுட்டி காட்டுவதை அவை அடக்கத்துடன் ஏற்று கொள்ளுங்கள். தவறுகளை ஏற்றுக் கொள்வதும். அவை திரும்ப வராமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றும் வெட்கப் பட வேண்டிய விஷயம் அல்ல.
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று, தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கொள் .தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக்கொள் என்று எனக்கு பெரியவர்கள் சொன்ன அறிவுரையை உங்களுக்கு சொல்லி,
சென்று வாருங்கள் வென்று வாருங்கள் என்று வாழ்த்தி வழியனுப்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross