Re:... posted byVilack SMA (Huanghua , Hebei , china)[31 August 2013] IP: 221.*.*.* China | Comment Reference Number: 29894
கூட்டாளி ஹிஜாஸ் மைந்தன், ஊரின் அவல நிலையை அழகாக சொல்லி இருக்கிறார் . இருந்தாலும் என்ன செய்வது ! அடுத்தவன் செத்தாலும் பரவாயில்லை , என் பிள்ளையை அழகு படுத்தி , நான்கு நாட்களுக்கு தெருவில் உட்கார வைப்பேன் என்று வைராக்கியம் பிடித்தவர்கள் உள்ளவரை இப்படித்தான் இருக்கும் .
சமீபத்தில் என் மகனை பைக்கில் உட்காரவைத்து , ரயில் நிலையம் செல்ல சுலபமாக செல்ல வேண்டிய பாதையில் செல்ல முடியாமல் , நான் இதுவரை ஊரில் பார்த்தே இராத சந்து பொந்துக்களைஎல்லாம் கடந்து ரயில் நிலையம் செல்வதற்குள் , ரயில் வந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது . ஓடும் ரயிலில் தொற்றிக்கொண்டு ஏற வேண்டிய நிலை .
இதில் பந்தல் காரனையும் திருமண வீட்டாரையும் குறை சொல்வதைவிட , ரோட்டை அடைக்க அனுமதி அளித்த நகராட்சி நிர்வாகத்தைதான் குற்றம் சொல்ல வேண்டும் . நிர்வாக சீர்கேட்டைதான் இது காட்டுகிறது . பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களின் வீடுகளுக்கு , மின்சாரம் , தண்ணீர் இணைப்பை துண்டித்து , அபராதமும் விதித்தால் , " வெட்டை " இல்லாதவங்க நாங்க எங்கே போவது என்று ஒருவரும் வாய் பேச மாட்டார்கள் .
ஒவ்வொரு ஜமாத்திற்கும் ஒரு ஜலாலியா தேவை என்பதெல்லாம் தேவையற்ற வாதம் . இப்போது ஊரின் பெரும்பாலான பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு , சிறிய பெரிய அளவினாலான திருமணங்கள் நடத்த போதுமானதாகவே உள்ளது . தாலி கட்டும் நிகழ்ச்சி , கை பிடித்துவிடும் நிகழ்ச்சி , திருமணம் முடிந்த இரவில் நடக்கும் விருந்து போன்றவற்றிற்கு பெண்கள் தைக்காக்கள் இருக்கிறது . பந்தல் காரனுக்கு கொடுக்கும் தொகையைவிட பள்ளிவாசலுக்கும் தைக்காக்கும் கொடுக்கும் தொகை மிக சொற்பமே !
இனியாவது திருந்த பார்ப்போம் . அடுத்தவர் வசைபாட்டிலிருந்து புதிதாக வாழ்கையை தொடங்க இருக்கும் மணமக்களை பாதுகாப்போம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross