பாராட்டவா? போராடவா?... posted bymackie noohuthambi (kayalpatnam)[31 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29896
நிதர்சனமான உண்மைகள். கட்டுரை ஆசிரியர் களம் இறங்கி போராட வர வேண்டும். அதற்கு இளைஞர் கூட்டம் துணை வர வேண்டும். மாற்றங்களை இளைஞர்களால்தான் ஏற்படுத்த முடியும்.
அசாத்தியமான தைரியம்.
இந்த கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு அல்ல, இந்த விஷயங்களை செய்கின்ற இளைஞர்களுக்கு, இவற்றை பார்த்தும் பார்க்காதது போல் இருக்கும் பெரியவர்களுக்கு, பெருந்தகைகளுக்கு, தனவந்தர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு, யாருக்கு வந்த விருந்தோ நோயோ என்று வாளாவிருக்கும் ஒட்டுமொத்தமாக நம் எல்லோருக்கும்!
இதே இணையத்தளத்தில் சில நாட்களுக்குமுன் ஒரு செய்தி வந்தது, "கொஞ்சம் அஜஸ்ட் பண்ணக்கூடாதா?" என்ற தலைப்பு.
அதில் இந்த அடியேனின் ஒரு தாழ்மையான கருத்து பதிவு செய்யப்பட்டு இருந்தது.
RECEPTION IS AN UWARRANTED FUNCTION WHICH BRINGS UNNECESSARY TENSION என்று குறிப்பிட்டிருந்தேன். நபி வழி என்று அடித்துக் கொள்பவர்களும் ஆபாக்கள் நம் முன்னோர்கள் காட்டிய வழி என்று மார் தட்டிக் கொள்பவர்களும் இதற்கு எந்த முன்னுதாரணத்தையும் சொல்ல முடியவில்லை. எல்லோரும் இந்த வீண் கால விரயங்கள் பண விரயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். யாரும் யாரிடமும் போய் இது சரி இல்லை, முறை இல்லை என்று நேரில் சொல்ல முடியவில்லை. தடுக்க முடியவில்லை. முஹல்லா பிரச்சினையாக. தெரு வழி பிரச்சினையாக, இன்னும் ஒரு படி மேலே சென்று அகீதா பிரச்சினையாக மாற்றப் பட்டு கலவர பூமியாக இந்த காயலர் பூமி மாறி விடக் கூடாதே. ஏற்கெனவே, 3 நாள் நோன்பு, 3 நாள் பெருநாள் என்றெல்லாம் நாம் பிரிந்து இருக்கிறோமே, இது வேறு பிரிவினையை ஏற்படுத்தி விடக்கூடாதே என்றுதான் நினைக்கிறோம்.
ஆனால் காலம் இப்போது கனிந்து வந்துள்ளது, எல்லோரும் சிந்திக்கிறார்கள், மாற்று வழிதான் என்ன.. எல்லா சங்கதினர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து இதை பற்றிய ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து, மக்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேச ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த கருத்தரங்கில் உலமாக்கள், அரபிக்கல்லூரி முதல்வர்கள், பள்ளிக்கூட முதல்வர்கள், கல்லூரி தாளாளர்கள் (ஆண்கள், பெண்கள்) எல்லோரும் தங்கள் கருத்துக்களை காய்தல் உவத்தல் இன்றி பதிவு செய்து, அதன் அடிப்படையில் ஊர் மொத்தமாக இந்த சாபக் கேடுகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும்..
MANN YASHFAU SHAFAA ATHAN HASANATHAN YAKUN LAHOO NASEEBUM MINHAA
ஒரு நல்ல காரியத்துக்கு துணை சென்றால், பரிந்துரை செய்தால், அதற்காக முயற்சித்த எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு என்று அல்லாஹ் சொல்கிறான்.
வாருங்கள் போராடுவோம். இந்த சமூக சீர்கேட்டை சரி செய்வோம்.அல்லாஹ் துணை நிற்பான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross