Re:...ரோட்டு திருமணங்கள் -- சில ஆலோசனைகள் --- posted byvakil ahamed (chennai)[01 September 2013] IP: 14.*.*.* India | Comment Reference Number: 29914
ரோட்டு பந்தல் திருமணங்கள்.....
சில ஆலோசனைகள்.......
1. வீதியில் திருமணங்களை நடத்துவதில்லை என மனவீட்டாரின் மனங்களில் முதலில் மாற்றங்கள் மலர வேண்டும்.
2. இறை இல்லத்தில் திருமணங்கள் நடத்தபடுவதுதான் சிறந்தது
என்பதை உணர வேண்டும். ஆலிம்கள் இதனை எடுத்து சொல்லவேண்டும்.
3. தங்களது வாழ்விடத்துக்கு அருகில் நிகாஹ் மஜ்லிஸ் அல்லது
திருமண மண்டபம் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள பள்ளிவாசலில் நிகாஹ் நடத்த முடிவெடுக்க வேண்டும்.
4. கொள்கை பிரச்சினையால் அருகில் உள்ள பள்ளிவாசலில் இடம் சாத்தியப்படாவிட்டால், தங்கள் கொள்கைக்கு ஒத்து போகிற பள்ளிவாசலில் திருமணத்தை நடத்த முடிவெடுக்க வேண்டும்.
5. இருக்கிற திருமண மண்டபங்கள், மைதானங்கள், பள்ளிகூடங்கள், சங்கங்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத திறந்தவெளி இடங்களையும் வாய்ப்புகளின் அடிப்படையில் திருமணங்களுக்கு பயன்படுத்தலாம் .
6. பெண்கள் சார்ந்த திருமண வைபவங்களுக்கு, பெண்கள் தைக்காக்கள், மதரசாக்கள்,மொட்டைமாடிகள், தோட்டங்களை பயன்படுத்தலாம்.
7. காலம் காலமாக பழகிப்போன ரோட்டு பந்தல் திருமணங்கள் உடனடியாக முடிவுக்கு வராது. எனவே குறைந்த பட்சம் 6 மாதம் அல்லது அதிகபட்சம் 1 வருடம் வரை நகராட்சி நிர்வாகம் ரோட்டு பந்தலுக்குஅனுமதி நீடிப்பு செய்வதுதான் இயற்கை நீதிப்படி சரியானது. ஆனால் இதை கண்டிப்புடன் அறிவிப்பு செய்து,அந்த கால கெடுவுக்குள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
8. வேறு வழியே இல்லை என்று திருமண வீட்டார் தகுந்த காரணம் காட்டுகிறது நகராட்சி நிர்வாகத்திற்கு சரியென்று பட்டால், திருமணத்திற்காக ஒரு நாள் மட்டும் ரோட்டில் பந்தலிட அனுமதிக்கலாம். மறுநாள் பந்தல் பிறிக்க படாத பட்சத்தில் அதிக பட்ச அபராதம் விதிப்பதோடு, பந்தலை நகராட்சி நிர்வாகம் பிரிதெடுப்பதோடு அதனை ஜப்தி செய்யவேண்டும்.
9. ரோடுகளில் திருமணம் நடைபெறும்போது, பிரித்து சேர்க்கும் முறையில் அமைந்த ரெடி மேட் மேடைகள் வைத்து கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கவேண்டும். சண்ட்ரிங் பலகை மேடைகளுக்கு அனுமதி வழங்ககூடாது. வைபவம் முடிந்ததும் மேடை உடனடியாக பிரித்து அகற்றப்படவேண்டும்.
10. ரோட்டில் பந்தல் அமைத்தால், பந்தலில் நடைபெறும் திருமண நிகழ்வுகள்,தொடர்புடைய வைபவங்களை ஒரே நாளில் முடித்திட மணவீட்டார் முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.
11. வைபவ நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் பந்தலை தேவை இல்லாமல் அடைத்து வைத்து போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.
12. பந்தல் பாதை குறிப்பிட்ட நேரத்திற்கு அடைக்கப்படும் பட்சத்தில், அருகில் உள்ள மாற்றுவழி பாதை குறித்து அறிவிப்பு தெரு முனையில் அல்லது சந்திப்பில் எழுதி வைக்கப்படவேண்டும்.
13. பந்தல் அமைத்தவரின் பெயர், முகவரி, செல்பேசி ஆகியவை குறித்த விபரம், அவரை தேவையானால் உடனே தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக பந்தலில் குறித்து வைக்க படவேண்டும். அவரை பற்றிய மேற்படி விபரம் நகராட்சி நிர்வாகத்துக்கும் தெரியபடுத்தபடவேண்டும்.
இதுபோன்ற மாற்று ஆலோசனைகளை நம் மக்கள் முன் எடுக்காத பட்சத்தில், யாராவது நீதி மன்றத்தை நாடினால் ரோட்டு பந்தல் எப்போது வேண்டுமானாலும் நிரந்தரமாக தடை செய்யப்படலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross