தீர்வு என்ன...? கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது. posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[01 September 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29918
அன்புக்குரிய வாசகர்களே அஸ்ஸ்லாமு அலைக்கும். இக்கட்டுரை சம்பந்தமாக கருத்து பதிந்த, இன்னும் பதிந்து கொண்டிருக்கும் அவைவர்க்கும் எனது இதயம் கனிந்த நன்றி!
பொதுப்பாதை நியதி தொடர்பாக இத்தளத்தில் வெளிவந்த செய்தி மற்றும் அதை தொடர்ந்து வெளிவந்த எனது கட்டுரையில் நிகழ்வுகள் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி மட்டுமே அலசப்பட்டிருந்தது. தீர்வு என்ன என்பது பற்றி நான் இக்கட்டுரையில் கூறியிருந்தால் அது ஒரு தனி மனிதனின் கருத்தாகவே கணிக்கப்பட்டிருக்கும். ஆதலால் மதிப்புக்குரிய வாசக பெருமக்களின் மேலான கருத்துக்கள் மூலம் தீர்வு கிடைக்கட்டுமே என்று இருந்து விட்டேன்.
பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலும் பொதுப்பாதையை அடைப்பதற்கு எதிராகவே வந்துள்ளது. ஆகையால் இதற்காகன நல்ல தீர்வு அதுவும் நமதூருக்கு ஒத்துப்போகும் தீர்வுகளை தங்கள் கருத்துக்கள் மூலம் எதிர்பார்க்கின்றேன். எப்படியாவது இதற்கு ஓர் நல்ல தீர்வு வந்தால் நாமும் கலந்தாலோசித்து ஜமாஅத்துகள் மூலம் செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதை அறிய தருகின்றேன். வஸ்ஸ்லாம்.
என்றும் அன்புடன்,
ஹிஜாஸ் மைந்தன்.
கட்டுரை ஆசிரியர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross