Re:... posted byVilack SMA (shiqiao ,Guangzhou)[10 September 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 30067
அன்பார்ந்த Nijam காக்கா அவர்களுக்கு ,
புற்று நோய் இன்று நேற்றல்ல , பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்துவரும் நோய் . அன்று விஞ்ஜானம் வளர்ச்சியடையாத காலம் . ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தால் , அவர் எதனால் இறந்தார் என்பதை அறியமுடியாத காலம் . ஆனால் இன்றோ , ஒருவருடைய உடலில் எந்த வகை பாதிப்பு உள்ளது என்பதை துல்லிதமாக அறிய முடியும் . அன்று நமதூரின் மக்கள்தொகை குறைவு . அன்றுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப இறப்பின் விகிதத்தையும் , இன்றுள்ள மக்கள்தொகையின் இறப்பு விகிதத்தையும் கணக்கிட்டு பார்த்தால் விகிதாச்சாரம் சரியாகத்தான் இருக்கும் . இதற்காக DCW செய்வது சரி என்று நான் சொல்லவில்லை .
முதலில் நமதூரின் உணவு பழக்க வழக்கங்களையும் , மக்களின் வாழ்க்கை முறையையும் சற்று ஆராய்ந்து பாருங்கள் . குறைபாடு எதில் உள்ளது என்பதை நீங்கள் அறியலாம் .
நமதூரின் ஒரு இணையதளத்தில் படித்தது : 1/2 கிலோ ஆட்டிறைச்சியில் கலரி கறி தயாரிக்க 300 கிராம் எண்ணெயும் , நெய்யும் வேண்டுமாம் . போதாக்குறைக்கு தேங்காய் பால் 100 கிராம் போடணுமாம் , 50 கிராம் மேவா சாமான் போடணுமாம் . இப்படியெல்லாம் " நெய்யும் நெருப்புமாக " உண்டால் நோய் வராமல் என்ன பண்ணும் ?
ஆகவே அன்பரே , ஒரு விசயத்தை கையிலெடுக்கும்போது , முதலில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டு , செயல்பட்டால் நல்லது .
வாழ்க்கை வழிமுறைகளை சற்று மாற்றி பாருங்களேன் . DCW மட்டுமல்ல , எந்த W ம் உங்களை தீண்டாது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross