செய்தி: விநாயக சதுர்த்தி 2013: பலத்த பாதுகாப்பிற்கிடையே விநாயகர் ஊர்வலம் காயல்பட்டினத்தை விட்டும் அமைதியாகக் கடந்து சென்றது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வேண்டப்பாடாத பெண்களின் விஜயம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[12 September 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30075
ஊர்வல புகைப்படத்தில் ஓரிடத்தில் பார்வையாளவர்களாக சில முஸ்லிம் பெண்கள் "போரா" அணிந்திருந்த பெண் உட்பட நின்று கொண்டிருந்ததை பார்க்க முடிகிறது!
கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்னாள் நாங்களே அந்த ஊர்வல பாதையின் பக்கம் போவதைத் தவிர்த்துக் கொள்வோம், ஏன் தெரியுமா? பயந்தல்ல, சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே வம்புக்கிலுக்க முயல்வதும், அது முற்றி வன்முறை கல்வீச்சி என்று கலவரம் வெடிக்க வாய்ப்புகளும் உண்டாக்க கூடும், என்பதால்தான்!
ஏனனில் அவர்கள் பக்தி பரவசத்தால் மிகவும் உணர்ச்சியால் உந்தப்பட்டவர்களாக தங்கள் நிலையையே உணராமுடியாத பக்த கோடிகள் பலரும் பங்கு பெற்றிப்பார்கள்!
அல்லாஹ் காப்பாற்றுவானாக ஏதாவதொரு விரும்பத்தகாத சம்பவம் எந்த தரப்பின் மூலமாக வெடித்து விட்டால்..?????
ஆண்களே தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகிவிடும், பெண்களை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு அங்கு என்ன வேலை? ஒருவேளை பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தால் அங்கேயே நிற்க வேண்டியதுதானே?
ஏதாவது ஒன்று நடந்து விட்டால், ஆ.. பாருங்கள் முஸ்லிம் பெண்களை அடித்துவிட்டார்கள் மானபங்கதிற்கு முயன்றார்கள் என்று பரவி ஊர்மக்களின் நிம்மதியையும், மத நல்லிணக்க ஒற்றுமையும் சிதைத்து சீரழிவு சம்பவத்திற்கு வித்திடுவதல்லவா இந்த வேண்டப்பாடாத பெண்களின் விஜயம்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் !
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Moderator: கருத்தாளர் கூறியுள்ளது போல் அங்கு ஊர்வலத்தைக் காண என பெண்கள் யாரும் வரவில்லை என்பதை அங்கிருந்த எம்மால் அறிய முடிந்தது. மாறாக, பள்ளி - கல்லூரி வாகனங்கள் சில, ஊர்வலம் கடந்து செல்லும் வரை பேருந்து நிலையத்தில் காத்திருந்தன. அவற்றிலிருந்து இறங்கிச் சென்ற பெண்களாகவோ அல்லது (ஊர்வல நேரத்தை அறிந்திராத நிலையில், அந்நேரத்தில் அவ்வழியே கடந்து சென்றாக வேண்டிய நிலையிலிருந்த பெண்களாகவோ இருக்கலாம். ஊர்வலத்தைக் காண என அங்கு பெண்கள் வருவதற்கான சூழ்நிலை இருக்கவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross