யார் நகராட்சியிலோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் மனு கொடுத்து கேள்வி எழுப்ப போகிறார்கள்...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30097
1.1 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்படும் சாலை 30 சென்டி மீட்டர் அளவிற்கு தோண்டப்பட வேண்டும் என்று பணி ஒப்பந்த விதிமுறை உள்ளது.. இது போல் பல விதிமுறைகள் வேண்டும்...!
ஆனால் நடப்பது என்ன...? பழைய சாலையின் சரல்களை, தார்களை தோண்டி எடுக்காமலே அதன் மேல் சரல்களை பரப்பி சாலை அமைக்க படுகிறது...!
இது மிக பெரிய சாலை பணியின் ஏமாற்று கொடுமை அல்லவா...!
இது விசியமாக நகரில் எந்த ஜமாஅத் கூட்டமைப்பு - பொது அமைப்பு, சங்கங்கள், ஆர்வலர்கள், இவைகளில் யார் நகராட்சியிலோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் மனு கொடுத்து கேள்வி எழுப்ப போகிறார்கள்...? இதை வேறு ஒரு சென்னை தலைமை அமைப்பு செய்தால் அவமைப்பை கொச்சை படுத்தவதும்.. மக்களை சிரமத்திற்கு ஆளாகிக்கிறார்கள் என்றும் வசை படுகிறார்கள்.. என்பது வேதனையான கடந்த கால நடப்பு உண்மையே...!
முன்பு இது போன்ற தவறை இதே ஒப்பந்தக்காரர் சமீபத்தில் ஆசாத் தெரு சாலையில் பல முறைகேடுகளை செய்யும் போது அதை சென்னை ஊழல் எதிர்ப்பு இயக்கம் காயல் நகரின் கிளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்து சென்றதின் விளைவாக ஆட்சியரின் உத்தரவில் பேரில் ஆய்வு குழு வருகை தந்து பரிசோதித்து அறிக்கை தாக்கலின் பேரில் ஆசாத் சாலையை முறைப்படி சாலை அமைக்கப்பட்டது... ஆனால் அதில் மக்களுக்கு சிரமம் இருக்கத்தான் செய்தது மறுபதற்கில்லை...! அந்த சிரமத்தின் பலனாக இன்று நல்ல தரமான சாலையை அந்த தெரு மக்கள் அமைய பெற்று இருக்கிறார்கள் குறிப்பிடத்தக்கது...!
பூனைக்கு யார் மணி கட்டுவது...! ஊர் இரண்டு பட்டால் இந்த மாதிரி ஒப்பந்தகரர்களின் காட்டில் செல்வ மழை தான்...! உறுப்பினர்களுக்கும் தலைவிக்கும் ஒற்றுமை இல்லை... இது வேறு இவர்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்து விடுகிறது...!
தற்போது இந்த சாலைக்கு யார் மூலம் நல்ல சாலை அமைய போகிறதோ...? இல்லை இந்த ஒப்பந்தகாரரின் இஷ்டபடி இச்சாலை எத்தனை மாதம் தாங்க போகிறதோ...? வரக்கூடிய மழை காலத்தில் பார்ப்போம்....!
குறிப்பு:- நியாயத்தை கருத்தாக பதிந்தால் அவன் பிறருக்கு நகர்மன்றம் முன் அவனுக்கு எதிரியாக பார்க்க படுகிறான்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross