காயல்பட்டினம் புதிய பேரூந்து நிலையத்தை ஒட்டியுள்ள விசாலாட்சி அம்மன் கோவில் தெருவிற்கு தெற்கிலிருந்து தமிழக மின்சார வாரியத்தின்
துணை மின் நிலையம் அமையவுள்ள பப்பரப்பள்ளி பகுதி வழியாக ரத்தினாபுரி வரை செல்லும் சாலையை விரிவுப்படுத்தி, மேம்படுத்தும் பணிகள்
தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளுக்கான நகர்மன்ற அனுமதி - டிசம்பர் 31, 2012 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில்
வழங்கப்பட்டது.
மேலும் 22 லட்ச ரூபாய் மதிப்பிலான இப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரி பிப்ரவரி 4 தேதியிட்ட
விளம்பரமும் நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 26, 2013 அன்று திறக்கப்பட்ட டெண்டரில் ஆர். தலவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர், மதிப்பீட்டு தொகையை விட 0.05 சதவீதம் குறைந்த
விலைக்கு, இப்பணியினை வென்றார்.
நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் சமர்ப்பித்து, அதற்குரிய கூட்டம் -
ஏப்ரல் 5, 2013 அன்று நடைபெற இருந்ததால், மார்ச் மாதம் நகர்மன்றக்கூட்டம் நடைபெறவில்லை.
ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் இப்பணிகளுக்கு குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளிகள்
வழங்கிய ஒப்பந்ததாரர் தலவாணிமுத்துவிற்கு - பணிகள் வழங்கப்பட்டது.
அப்பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
நிறைவேற்றப்படவேண்டிய பணிகளின் விபரம் ...
======> பணிகள் 1200 மீட்டர் நீளத்திற்கு நடைபெறும்
======> ஏற்கனவே உள்ள சாலையின் அகலம் 3.3 மீட்டர்
======> இச்சாலையின் இரு புறத்தையும் தலா 1.1 மீட்டர் அளவிற்கு நீட்டித்து, புதிய சாலையின் அளவு 5.5 மீட்டர் என அகலமாகும்
======> (2 x ) 1.1 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்படும் சாலை 30 சென்டி மீட்டர் அளவிற்கு தோண்டப்பட வேண்டும்
======> தோண்டப்பட்ட மண் (800 க்யூபிக் மீட்டர்) நகராட்சி வளாகத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும்
======> (2 x ) 1.1 மீட்டர் பகுதியில், 1200 மீட்டர் நீளத்திற்கு, 15 செ.மி. ஆழத்திற்கு Red Gravel போடவேண்டும்
======> அதன் பிறகு (2 x ) 1.1 மீட்டர் பகுதியில், 1200 மீட்டர் நீளத்திற்கு, 7.5 செ.மி. ஆழத்திற்கு WBM - Grade II Metal போடவேண்டும்
======> அதன் பிறகு (2 x ) 1.1 மீட்டர் பகுதியில், 1200 மீட்டர் நீளத்திற்கு, 7.5 செ.மி. ஆழத்திற்கு WBM - Grade III Metal போடவேண்டும்
======> அதன் பிறகு (2 x ) 1.1 மீட்டர் பகுதியில், 1200 மீட்டர் நீளத்திற்கு, 10 சதுர மீட்டருக்கு 4 கிலோ கிராம் என 2640 சதுர மீட்டருக்கு tack coat போட வேண்டும்
======> அதன் பிறகு 3.3 மீட்டர் பகுதியில், 1200 மீட்டர் நீளத்திற்கு, 10 சதுர மீட்டருக்கு 3 கிலோ கிராம் என 3960 சதுர மீட்டருக்கு tack coat போட வேண்டும்
======> அதன் பிறகு மொத்தமாக 5.5 மீட்டர் பகுதிக்கும், 1200 மீட்டர் நீளத்திற்கு, 2.5 செ.மி. அடர்த்திக்கு Semi Dense Bituminous Concret போட வேண்டும்
பணி விபரம்:
ஐ. ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகர்மன்றம். |