காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில் - தமிழகம் சார்பாக - பங்கேற்கவுள்ளது. தஞ்சாவூரில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான (சீனியர் பிரிவு) கால்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றதையடுத்து - இந்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எல்.கே.மேனிலைப்பள்ளி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முன்னர் - எல்.கே.மேனிலைப்பள்ளி,
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 2012 ஆகஸ்ட் மாதம் நடந்த வட்டார அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளிலும்,
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் கடந்த 2012 ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளிலும்,
கோவில்பட்டியில் 2012 அக்டோபர் மாதம் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டிகளிலும்,
வெற்றிபெற்றது.
54வது சுப்ரடோ கோப்பை போட்டிகள் - சப்-ஜூனியர் ஆண்கள் (14 வயதுக்கு உட்பட்டவர்கள்), ஜூனியர் ஆண்கள் (17 வயதுக்கு உட்பட்டவர்கள்), ஜூனியர் பெண்கள் (17 வயதுக்கு உட்பட்டவர்கள்) - என மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றன.
எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் 04 முதல்
அக்டோபர் 19 வரையில் நடைபெறும் ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகளில் பங்கேற்கிறது. ஜூனியர்
பிரிவில் பங்கேற்கும் மாணவர்கள் - 1996 நவம்பர் 1, 1996 தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.
ஜூனியர் பிரிவு போட்டிகளில் இந்தியாவிலிருந்து 29 அணிகளும், ஓமன், உக்ரைன் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஒவ்வோர் அணியும் என 32 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் அனைத்தும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகம் சார்பாக
பங்கேற்கும் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி - மேகாலயா, டில்லி மற்றும் திரிபுரா அணிகள் இடம்பெற்றுள்ள 'C' பிரிவில் உள்ளது.
எல்.கே.மேனிலைப்பள்ளி - தனது
முதல் போட்டியில், அக்டோபர் 04 அன்று, திரிபுரா அணியுடனும்,
இரண்டாம் போட்டியில், அக்டோபர் 05 அன்று, டில்லி அணியுடனும்,
மூன்றாம் போட்டியில், அக்டோபர் 06 அன்று, மேகாலயா அணியுடனும்,
மோதுகின்றது.
எல்.கே.மேனிலைப்பள்ளி தான் இடம்பெற்றுள்ள C பிரிவில் முதலிடம் பெறும் பட்சத்தில், அக்டோபர் 08 அன்று நடைபெறும் (இரண்டாவது) காலிறுதிப்
போட்டியில், D பிரிவில் முதலிடம் பெறும் அணியுடன் மோதும். முதலாவது காலிறுதிப் போட்டி அதே நாளில், A மற்றும் B பிரிவுகளில் முதல்
இடம்பெற்ற அணிகளுக்கிடையே நடைபெறும்.
காலிறுதிப் போட்டிகளில் எல்.கே.மேனிலைப்பள்ளி வெற்றி பெற்றால், முதல் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன், அக்டோபர் 12
அன்று நடைபெறும் - முதல் அரை இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.
இறுதிப் போட்டிகள் அக்டோபர் 19 அன்று நடைபெறும்.
போட்டிகள் அனைத்தும் -
டில்லி கேட் பகுதியில் உள்ள, டாக்டர் அம்பேத்கர் மைதானத்திலும், ரேஸ் கோர்ஸ் புது வில்லிங்டன் கேம்ப் பகுதியில் உள்ள விமானப்படை கால்பந்து மைதானத்திலும் நடைபெறும்.
நாக் அவுட் / லீக் முறையில் நடைபெறும் இப்போட்டிகள், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும்.
விளையாட்டு நேரம் - ஒரு பாதி, 30 நிமிடம் என குறைக்கப்பட்டுள்ளது. இடைவேளை 5 நிமிடங்கள். போட்டி சம நிலையில் முடியும் பட்சத்தில்,
கூடுதல் நேரம், ஒரு பாதி - 7 நிமிடம் அடிப்படையில், இரு பாதிகளாக நடைபெறும். கூடுதல் நேரத்திலும் சம நிலை தொடரும் பட்சத்தில், டை ப்ரேக்கர் முறையில், போட்டி முடிவு செய்யப்படும்.
==> இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பணப்பரிசாக ரூபாய் 3 லட்சம் வழங்கப்படும்
==> இறுதி போட்டியில் தோல்வி பெறும் அணிக்கு பணப்பரிசாக ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்
==> அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இரு அணிக்கு, தலா 40,000 ரூபாய் வழங்கப்படும்
==> காலிறுதிக்குத் தகுதி பெற்ற நான்கு அணிகளுக்கு, தலா 30,000 ரூபாய் வழங்கப்படும்
==> Fair Play விருது பெறும் அணிக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும்
==> சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூபாய் 25,000 மற்றும் மடிக்கணினி வழங்கப்படும்
==> முன்னேற வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் வீரருக்கு மடிக்கணினி பரிசாக வழங்கப்படும்
==> சிறந்த கோல் கீப்பருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும்
==> சிறந்த பயிற்சியாளருக்கு ரூபாய் 25,000 வழங்கப்படும்
தேசிய அளவில் பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான போட்டிகளை நடத்த வேண்டும் என்ற யோசனை முதலில் - 1958ஆம் ஆண்டு, அப்போதைய இந்திய விமானப்படை தலைவர் சுப்ரடோ முக்கர்ஜீயால் வழங்கப்பட்டது.
எதிர்பாராத விதமாக சுப்ரடோ முக்கர்ஜி, 1960இல் ஜப்பானில் காலமானார். அவரின் நினைவாக, SUBROTO MUKERJEE SPORTS EDUCATION SOCIETY
1960ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, அவ்வாண்டு முதல் - ஒவ்வோர் ஆண்டும் சுப்ரடோ கோப்பை போட்டிகள், டில்லியில் நடத்தப்பட்டு வருகிறது. 1998ஆம் ஆண்டு முதல், சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
முந்தைய ஆண்டுகளில் வெற்றி பெற்ற அணிகள்
2011 NCC (West Bengal & Sikkim)
2010 Govt. Mamit School, Mizoram
2009 SAI Eastern Centre, Kolkata
2008 Army Boys, Karnataka
2007 No. 1 Mizo Bn NCC (NER), Aizawl, Mizoram
2006 Nobel Academy, Kathmandu, Nepal
2005 Nobel Academy, Kathmandu, Nepal
2004 BSL IV E HS School, Bokaro Jharkhand
2003 Oxford Higher Secondary School, Aizawl Mizoram
2002 BSL IVE High School Bokaro Steel City Jharkhand
2001 Govt. HR. Sec. School Aizawl (Mizoram)
2000 Rangadih HS Purulia, W. Bengal
1999 Govt. Boys HS. Shillong
1998 Mamta Modern HS, Delhi
1997 Sukantanagar Vidya Niketan, Calcutta
1996 Madhyamgram HS, West Bengal
1995 Madhyamgram HS, West Bengal
1994 Sports College, Lucknow, UP
1993 St. Lgnalius HS, Gumla, Bihar
1992 Arna Vidyapith HSS, Guwahati, Assam
1991 Sports College, Lucknow, UP
1990 St. Lgnalius HS, Gumla, Bihar
1989 Adarsh Seve Vidyalaya, Varanasi
1988 Madhyamgram HS, West Bengal
1987 No. 1 Goa Naval Unit NCC, Panaji
1986 Govt. HSS, Kokrajhar, Assam
1985 Madhyamgram HS, West Bengal
1984 Govt. HSS, Car Nicobar
1983 Madhyamgram HS, West Bengal
1982 Madhyamgram HS, West Bengal
1981 Madhyamgram HS, West Bengal
1980 Ibemcha HSS, Manipur & Govt. HS, Dimapur Nagaland (Joint Winners)
1979 Ibemcha HSS, Manipur
1978 St. Anthony's Shillong
1977 Adarsh Seve Vidyalaya, Varanasi
1976 Nataji Sikhayatan, Agarpara, WB
1975 PKA Institution , Calcutta
1974 Sir G.D. Patliputra HS, Patna & PKA Institution , Calcutta (Joint Winners)
1973 Sir G.D. Patliputra HS, Patna
1972 PKA Institution , Calcutta
1971 Tournament not held (Indo-Pak War)
1970 Gorkha Boys Company, Dehradun
1969 Govt. HSS Car Nicobar & Gorkha Boys Company, Dehradun (Joint Winners)
1968 PKA Institution , Calcutta
1967 Govt. HSS Car Nicobar
1966 Govt. HSS Car Nicobar
1965 Shri KAB Vidyalaya, Hazaribagh & Gorkha Military HSS, Dehradun (Joint Winners)
1964 Gorkha Military HSS, Dehradun
1963 Batanagar HS, West Bengal
1962 Tournament not held (Indo-China War)
1961 Rani Rashmani HS. Calcutta
1960 DAV HSS Daryaganj , Delhi & DAV HSS Chitraguta Road, New Delhi (Joint Winners)
இப்போட்டிகளுக்கு இந்தியாவின் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன.
மேலதிக விபரங்கள் -
www.subrotocup.com
https://twitter.com/SubrotoCup
https://www.facebook.com/subrotocup
|