ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறையும், காயிதேமில்லத் பேரவையும் இணைந்து தேசியக் கருத்தரங்கம் நடத்த ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்பாட்டாளர்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அன்புடையீர்!
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறையும், காயல்பட்டினம் காயிதேமில்லத் பேரவையும் இணைந்து “தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இசுலாம்”, “பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பன்முகப் பார்வை” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடத்திட திட்டமிட்டுள்ளோம். அது குறித்த ஆலோசனைக் கூட்டம் 18.09.2013 (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் L.K. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருந்தகைகள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு மதிப்பிற்குரிய தாங்கள் தங்கள் மேலான பணிச்சுமைகளுக்கு இடையில் மனமுவந்து வருகை தந்து தங்கள் ஆலோசனைகளை வழங்குவதோடு கருத்தரங்கம் சிறக்க வாழ்த்துமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்,
முனைவர் மு.கண்ணன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
ஆதித்தனார் கல்லூரி,
திருச்செந்தூர்.
அலைபேசி: 9994161715
ஆசிரியர் மு.அப்துல் ரசாக்,
அமைப்பாளர் – காயிதேமில்லத் பேரவை,
காயல்பட்டினம்.
அலைபேசி: 9489191760
குறிப்பு:
1. கருத்தரங்கம் நடைபெறும் இடம், நாள் குறித்த ஆலோசனை
2. பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் நிர்னயம் செய்தல்
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|