திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரி பகுதியில் அம்மா திட்ட முகாம் பொதுமக்களுக்கே தெரியாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் அரசு உதவிகளை நேரடியாக பெற முடியாமல் சிரமமடைந்தனர்.
தமிழக அரசு ஏழை எளிய மக்கள் அரசு நலத் திட்ட உதவிகள் எளிதாக பெறுவதற்காக அம்மா திட்ட முகாமை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று நேரடியாக முகாமை நடத்தி அரசு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ரேஷன் கார்டு பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல், திருத்தம், பட்டா பெயர் மாற்றம், அரசு உதவிகள் பெறுவதற்காக சான்றிதழ் போன்றவைகளை எளிதாக பெறும் வகையில் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் தாலுகா விற்குட்பட்ட ஆறுமுகநேரி பேரூராட்சியின் பெரும் பாலான பகுதி காயல் பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்திற்குட் பட்ட பகுதியில் உள்ளது. கணேசபுரம், மேலசண்முக புரம் கீழநவ்வலடிவிளை, காணியாளர் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு, எஸ்ஆர்எஸ் கார்டன், ஜெயின்நகர், பேயன்விளை, பேயன்விளை புதூர், ஏஐடியூசி காலனி, திசைகாவல் தெரு, லட்சுமிமாநகரம், விநாயகர் கோயில் தெரு, சோமசுந்தரி அம்மன் கோயில் தெரு, இலங்கத்தம்மன் கோயில் தெரு, பெரியான்விளை, செல்வராஜபுரம், பெருமாள் புரம் ஆகிய பகுதிகள் காயல்பட்டினம் தென்பாகம் கிராமத்திற்குள் அடங்கியுள்ளது.
இந்த கிராமத்திற்கான அம்மா திட்ட முகாம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே நடத்தப்பட்டது. இந்த முகாமையும் காயல்பட்டி னத்தில் வைத்து நடத்தினர். காயல்பட்டினம் வடபாகம் கிராமத்தில் பெரும்பாலான பகுதிகள் வயல்வெளிகளாக உள்ளன.
இந்த பகுதியில் குடியிருப்புகளே இல்லை. ஆனால் காயல்பட்டினம் வடபாகம் மற்றும் ஆறுமுக நேரி என குறிப்பிட்டு இரு தினங்களுக்கு முன் அம்மா திட்ட முகாமை காயல் பட்டினம் தென்பாகத்திற் குட்பட்ட மேல சண்முகபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்தப்பட்டது. முகாம் நடந்த பகுதியில் உள்ள மக்களே அந்த முகாமை வைத்து பயன்பெற முடியவில்லை.
இதனால் காயல்பட்டினம் தென்பாகத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி பகுதி மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
நன்றி:
தினகரன் இணையதளம் |