குவைத் நாட்டில் இந்திய அரசு தொலைதொடர்புத் துறையின் கட்டுமான திட்டப் பணிகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற 25 வயதிற்கு மேல் 35 வயதிற்குட்பட்ட லேபர்கள், கொத்தனார்கள், கார்பெண்டர்கள், சமையலர்கள்,
10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குவைத் நாட்டில் பணிபுரிந்து 5 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள், டிப்ளமோ சிவில்/பட்டம் பெற்ற ஆட்டோகாட் ஆபரேட்டர்கள்,
12-ஆம் வகுப்பு மற்றும் சர்வேயர் படிப்பிற்கான சான்றிதழ் பெற்ற சர்வேயர்கள்,
மேற்பார்வையாளர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் முன்னணி கட்டுமான நிறுவனத்திற்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 21 முதல் 25 வயதிற்குட்பட்ட எலக்ட்ரீசியன்கள் பெருளமளவில் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்திற்கேற்ற ஊதியத்துடன், இலவச தங்குமிடம் இரண்டு வருட முடிவில் விடுப்புடன்கூடிய இலவச விமான டிக்கெட் மற்றும் இன்னும் பிற வசதிகள் வேலையளிப்பவரால் அளிக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம் போன்ற விவரங்களுடன் அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட்டின் நகல்களை இணைத்து
எண்.42, ஆலந்தூர் சாலை,
அரசு மகளிர் தொழிற்பயிற்சிப்பிரிவு,
வளாகம், கிண்டி, சென்னை 600 032
என்ற முகவரியில் அமைந்துள்ள இந்நிறுவனத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |