நகர முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நடப்பாண்டின் ஹஜ் பயணியருக்கான தடுப்பூசி முகாம் கே.எம்.டி. மருத்துவமனையில் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழ்நாடு ஹஜ் குழு சார்பில், இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஹாஜியருக்கு மாவட்ட வாரியாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஹஜ் பயணியருக்காக, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் இத்தடுப்பூசி முகாம், இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) காலை 09.00 மணி முதல் நடைபெறவிருக்கிறது.
முகாம் ஒருங்கிணைப்புப் பணிகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |