ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - காயல்பட்டினம் கிளை சார்பில், இவ்வாண்டு கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றப்படவுள்ளது.
மாடு பங்கு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பங்கு சேர விரும்புவோர்,
ஜாஹிர் ஹுஸைன் (கைபேசி எண்: +91 99940 97217),
முஜீபுர்ரஹ்மான் (கைபேசி எண்: +91 98949 80155),
முஹ்ஸின் (கைபேசி எண்: +91 98421 58232)
ஆகிய பொறுப்பாளர்களுள் ஒருவரைத் தொடர்புகொண்டு, தமது பங்குப் பதிவுகளை உறுதி செய்துகொள்ளுமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
K.முஹ்ஸின்
(முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்) |