இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் சார்பில் மாதந்தோறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏழாம் மாத கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து, அதன் அமைப்பாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இன்ஷாஅல்லாஹ், வருகிற 14-09-2013 சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் காயல் நகர அரசு நூலகம் அருகிலுள்ள ரிஸ்வான் சங்க வளாகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் ஏழாம் மாத் கலந்துரையாடல் இறையருளால் நடைபெறவுள்ளது. (நோன்பு மாதமும், அதைத் தொடா;ந்து நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கலந்துரையாடல் துவங்க உள்ளது)
தமிழாசிரியர் மு. அப்துர் ரஸ்ஸாக் எம்.ஏ. பி.எட்., எம்.பிஎல், அரசு நூலகர் அ.முஜீப், கவிஞர் ஷேக், எல்.டி. இப்றாஹிம், வி.எம். பாலமுருகன், வக்கீல் சகாய அமலன், க.வில்சன் அய்யா ஆகியோர் இதன் ஆலோசகராக இருந்து வருகிறார்கள்.
மாணவர்களும் மற்றவர்களும் தினந்தோறும் பத்திரிகை மற்றும் வார, மாத இதழ்கள், தனிநூல்கள், நூலகம் சென்று படிக்கத் தூண்டுவதும் முக்கிய நோக்கமாகும். நீங்கள் நூலகம் சென்று பத்திரிகை, தனிநூல் படித்து அதன் குறிப்புகளை எடுத்து இச்சபையில் வந்து பேசலாம்.
இதனால் பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஏற்படும். நூலகம் சென்று படிக்கும் வழக்கமும் உதயமாகும். மாணவர்கள் அதிகமாக குறிப்பு சேகாpக்கவும் பலர் பேசும் குறிப்பை அறிந்து கொள்ளவும் இம்மன்றம் உதவுகிறது. சென்னையில் மாதம்தோறும் மெரினா கடற்கரை மற்றும் காந்தி பீச் அருகில் 500 வது மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவது குறித்து சென்னை வானொலி நிலையம் செய்தி வெளியிட்டு வருகிறது. சென்னையில் இருந்த காலத்தில் அதன் உறுப்பினராக சென்று வருவேன்.
இந்த கலந்துரையாடலுக்கு வரும்போது உங்களுக்கு இலக்கியவேந்தர்கள் அறிவாளிகள் அறிமுகமாகி நண்பராக மாறுகிறார். ஒருமாதம் ஒருநாளில் நல்ல பொழுது போக்குடன் பிரயோஜனமாக அமைகிறது
ஒருமாதம் வந்து கலந்து உங்கள் பெயர் பதிவானால் மாதம்தோறும் உங்களை தேடி தபால் அறிவிப்பு வரும். ஒருமுறை கலந்து கொண்டு சபை நடவடிக்கைகளை பார்வையாளராக இருந்தும் பார்வையிடலாம். வருகின்ற அனைவரும் பேசவேண்டியதில்லை. விரும்பியவர்கள் பேசலாம். வயது வரம்பு கிடையாது. கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பை கண்ட நீங்கள் உங்கள் நண்பர்களோடு கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அல்அமீன் மினி மார்க்கெட் |