வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் - சனிக்கிழமையன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், காயல்பட்டினம் நகர்மன்றம் 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மல்லிகா, திருச்செந்தூர் டவுன் பஞ்சாயத் தலைவர் சுரேஷ் பாபு உட்பட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து திருசெந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கப்பட்டது. இதில் காயல்பட்டினம் சார்ந்தவர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
|