தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது. அப்பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். மேலும், அங்குள்ள பள்ளிவாசல் தலைவராக உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீன் மகன் சாதிக் அலி (32), முகம்மது மகன் ஷாஜூதீன் (34), அமது மகன் மன்சூர் அலிகான் (20) ஆகிய 3 பேரும், பள்ளிவாசல் தலைவரான முகம்மதுவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. முகம்மதுவை அவர்கள் 3பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 3.5.09 அன்று இரவு 9.30 மணியளவில், முகம்மது நகை பட்டறையை பூட்டிவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாதிக் அலி உட்பட 3 பேரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதனிடையே இந்த வழக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி பால்துரை 3பேருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.3ஆயிரமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வண்ணமுத்து ஆஜரானார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |