காயல்பட்டணம் - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,50,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 36 ஆவது செயற்குழுக் கூட்டம் மிகுதியான செயற்குழு உறுப்பினர்கள் விடுமுறையில் இருந்ததாலும் மருத்துவ சிகிச்சைக்கான விண்ணப்பங்களின் தேவையை முன்னிட்டும், 12.08.2013 திங்கட்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின், மன்றத் தலைவர் M.N.மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்கள் இல்லத்தில், எமது உள்ளுர் பிரதிநிதி A.L.தர்வேஸ் முஹம்மது அவர்கள் தலைமையில் நடந்தது.
பார்வையாளர்களாக எமது மன்றத்தின் முன்னால் செயற்குழு உறுப்பினர் N.T. சதக்கத்துல்லாஹ் மற்றும் ஹாங்காங் காயல் நற்பணி மன்ற உறுப்பினர் சுல்தான் அப்துல் காதிர் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
M.M.L. செய்து முஹம்மது அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைக்க, எமது மன்ற ஆலோசகர் M.E.L. நூஸ்கி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர்,நிதிநிலை அறிக்கையை மன்ற பொருளாளர் A.T. சூஃபி இபுறாஹீம் அவர்கள் தாக்கல் செய்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக நிதி ஒதுக்கீடு:
அதன்பின், நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த 13 கடிதங்கள் வாசிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மொத்தம் ரூ 1,50,000 /= ஒதுக்கீடு செய்யப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் புகழ்ச்சியும்.
இக்ராவின் செயல்பாடு:
இக்ராவின் சீரிய செயல்பாடுகள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து எமது உள்ளுர் பிரதிநிதி A.L.தர்வேஸ் முஹம்மது விளக்கினார்.
இறுதியாக M.M.L. செய்து முஹம்மது அவர்கள் துஆ ஓத, கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்,
S.A.C. அஹ்மது ஸாலிஹ்,
ஊடகக் குழு,
ரியாத் காயல் நல மன்றம்,
ரியாத் - சஊதி அரபிய்யா.
|