ஹாங்காங்கில் இளம் இந்திய நண்பர்கள் குழுவின் (YOUNG INDIAN FRIENDS CLUB) சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ் வகுப்புக்களின் 10ம் ஆண்டு துவக்க விழா செப்டம்பர் 07ம் தேதி நடைபெற்றது. வழக்கம் போல் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தமிழ் பயில ஆர்வமுடன் வந்திருந்தனர்.
மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. பின்னர் இளம் இந்திய நண்பர்கள் குழுவின் நிறுவனர் உபய்துல்லா, தமிழ் வகுப்பின் வளர்ச்சியை பற்றி பேசியதுடன் அதன் 10 ஆண்டுகால வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தமிழ் வகுப்பினை சிறப்பாக நடத்தி வரும் கலை அருண், உபைதார் ஆகியோர் குறித்த அறிக்கையை தமிழ் வகுப்பின் தலைவர் வழங்கினார். தமிழ் கலாச்சார சங்கத்தின் தலைவர் பி.இ.அருண், தங்களுக்கு தொடர்ந்து நல்லாதரவு அளித்து வருமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் கேட்டுக் கொண்டார்.
தமிழ் வகுப்பின் ஆசிரியர்களை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் அசீஸ் அறிமுகம் செய்து வைத்தார்..
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
சித்ரா சிவக்குமார், தினமலர். |