தமிழக அரசின் - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION) 2012-2013இன் கீழ் ரூபாய் 1
கோடியே 95 லட்சம் தொகையும், நகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் தொகையும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் செலவு
மதிப்பீட்டில், காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்வதற்கான தீர்மானம் கடந்த 2012 அக்டோபர் மாதம் 5
ஆம் தேதி நடந்த காயல்பட்டின நகர்மன்ற அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து - இப்பணிகள் குறித்த விளம்பரம் அக்டோபர் 17, 2012 - நாளிதழ்களில் வெளியானது.
பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து நவம்பர் 30, 2012 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
நகர்மன்றத்தால் - நவம்பர் 30, 2012 கூட்டத்தில் - அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் ஒன்று - புதிய பேரூந்து நிலையம் முதல் மேல நெசவு தெரு வரை மழை நீர் வடிகால் அமைக்கும் பணியாகும். 23 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இப்பணியை தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு தொகைக்கே செய்திட சம்மதம் தெரிவித்து, பணி ஒப்பந்தம் பெற்றார்.
சுமார் 350 மீட்டர் நீளத்திற்கும், 3.55 மீட்டர் அகலத்திற்கும், 1.35 மீட்டர் ஆழத்திற்கும் இம்மழை நீர் வடிகால் அமைக்கப்படவேண்டும்.
இப்பணி குறித்த ஆவணம்
நேற்று (செப்டம்பர் 12) துவங்கிய இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:10/15.09.2013] |