துணை வணிக வரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், கைத்தறித்துறை ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், சார்பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு செயல் அலுவலர், வேலை மற்றும் பயிற்சி துறை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக சட்டத்துறை உதவி பிரிவு செயல் அலுவலர், தலைமைச் செயலக நிதித்துறை உதவி பிரிவு செயல் அலுவலர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு துறை சிறப்பு உதவி அலுவலர், இந்து அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட 19 வகையான பதவிகளுக்கு 1064 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 (TNPSC GROUP – II) தேர்வு அறிவித்துள்ளது.
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதாவது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். சார்பதிவாளர் பதவிக்கு மட்டும் குறைந்தபட்ச வயது 20 ஆகும். இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 04.10.2013
தேர்வு நடைபெறும் நாள் : 01.12.2013
மேலதிக விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிப்பதற்கு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
மாதிரி பயிற்சி தேர்வுகளுக்கான இணையதளம் - http://182.18.176.43/tnpscdemo/index.aspx
தகவல்:
அ.முஜீபு (98945 86729)
அரசு நூலகர்,
காயல்பட்டினம்.
|