பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு, 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில
முதலமைச்சர் நரேந்திர மோடியினை அறிவித்துள்ளது. பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த முடிவை இன்று மாலை டில்லியில் அக்கட்சியின் தலைவர்
ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக 2001 ஆம் ஆண்டு தேர்வானார். 2002 ஆம் ஆண்டு - கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு
நடந்த குஜராத் கலவரத்தின்போது சிறுபான்மை சமுதாய முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். அப்படுகொலைகளுக்கு முக்கிய காரணம்
நரேந்திர மோடி தான் என பல மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மூன்று முறை மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றியடைய செய்துள்ள நரேந்திர மோடி - சிறந்த நிர்வாகி என்றும், அவரின்
ஆட்சியில் குஜராத் மாநிலம் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் அவரின் ஆதராவாளர்கள் கூறினாலும், நரேந்திர மோடியை பிரதமர்
வேட்பாளராக முன்னரே அறிவிக்க பாரதிய ஜனதா கட்சியிலும் எதிர்ப்புகள் நிலவின.
குறிப்பாக முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி - நரேந்திர மோடியை
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதை வெளிப்படையாக எதிர்த்து வந்தார். இன்று நடந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத அத்வானி, இத்தேர்வுக்
குறித்த தனது எதிர்ப்பினை அக்கட்சியின் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
கட்சி தலைவருக்கு எல்.கே.அத்வானி எழுதிய எதிர்ப்பு கடிதம்
1. Re:Changing pillows for headache posted bymackie noohuthambi (kurunegala, sri lanka)[13 September 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30084
Elevating Narendra Modi as the prime minister candidate will not solve any problem that are baffling Indian subcontinent at present. Only a renewed constitution and laws will be the long term solution. It is not the question of narendra modi or advani, both are culprits who shook and unrooted the secular face of the country.
Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put humpty together again. It is a kindergarten poetry, which can be applied to this so called prime minister candidates.
It is like changing pillows for headache, The headache will go only if you apply a proper medicine. Indian Democracy, though, boasted by us, as the best in the world, it has its own drawbacks. So, let our law makers first become the best citizens of india, free from all humbugs, vandalism, hooliganism and corruption.
Let us elect only the noble men to come into the parliament. Then only our country can prosper. Neither Narendra Modi nor Advani, not even Sonia Gandhi or Manmohan Singh are capable of setting right the constituional guarantees, given to minorities. May God grant us unselfish leaders to our country.
5. காங்கிரஸ் கூட்டணியையே நாம் ஆதரிக்க முடியும். ஆதரிக்க வேண்டும். posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[14 September 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 30091
எதிரிகளை குறைத்து மதிப்பிடவேண்டாம் .ஆரியர்கள் பிற சமூகத்தைக்காட்டிலும் அறிவில் சிறந்தவர்கள்.மதக்கலவரங்களை தூண்டிவிட்டு அதை வாக்குகளாக மற்றும் வல்லமை பெற்றவர்கள்..
மதசார்பற்ற சக்திகளில் போதிய அளவு மதி நுட்பமும் இல்லை. போதிய ஒற்றுமையும் இல்லை.இவர்கள் எவ்வாறு செயபடுகிரார்கள் என்பதை பொருத்துதான் வரும் தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும்.
உபி யை பொருத்தவரை சமாஜ்வாதி+காங்கிரஸ் கூட்டு சேர்ந்தாலே மொத்தமுள்ள 80 தொகுதிகளை கைப்பற்ற முடியும். இவர்கள் கூட்டு சேர்வார்கள் என்பது அரிதே! பிகாரில் நிதிஷ் குமார் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டு சேரவேண்டும். 4 தென் மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெரும்.எப்படியும் வெற்றி பெற வேண்டும்.காங்கிரஸ் மீது எவ்வளவு குறைகள் இருந்தாலும் சரி, நாம் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளை ஆதரித்தால் அது முஸ்லிம்களுக்கு எதிரான சூழலைத்தான் உருவாக்கும்.
தமிழ்நாட்டில்கூட , திராவிட கட்சிகள் இரண்டும் முஸ்லிம்களுக்கு எதிரிகள் இல்லை என்று சொன்னாலும்கூட , அவர்களால் நேரடியாக மத்திய ஆட்சியில் எந்த ஒரு தாக்கத்தையும் உண்டுபண்ண முடியாது. ஒன்று காங்கிரஸ் அல்லது பாஜக கூட்டணியில் இருந்துதான் இவர்கள் செயல்பட முடியும். மூன்றாவது அணி என்பதெல்லாம் வீணான கற்பனை. நடைமுறைக்கு ஒத்து வராதது.
எனவே காங்கிரசா அல்லது பாஜகவா, இதில் எது சிறந்தது என சீதூக்கி பார்க்க வேண்டும். எனவே காங்கிரஸ் கூட்டணியையே நாம் ஆதரிக்க முடியும். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளை நாம் (மத்திய தேர்தலின்போது) ஒருபோதும் ஆதரிக்ககூடாது. அதுவே பொதுவாக நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் சிறந்தது.
வாக்களிப்பின்போது முஸ்லிம்களின் வாக்குகள் 50% : 50% என பிரிந்திருந்தால் , அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. அதன்தாக்கம் பூஜ்ஜியம்தான் இருக்கும். முஸ்லிம்களின் வாக்குகள் 75% : 25% என்ற அளவில் பிரிந்திருந்தால் , அதன் தாக்கம் 50% தான் இருக்கும் . எனவே முஸ்லிம்களின் வாக்குகள் கண்டிப்பாக 100% : 0% என இருந்தால் மட்டுமே , அதன் தாக்கம் 100% இருக்கும். நாம் வாகளிக்கும்போது இதை கவனத்தில்கொள்ள வேண்டும். எனவே திமுக அல்லது அதிமுக என சண்டையிட்டுக்கொண்டு நம் வாக்குகளை வீணாக சிதறடித்து பயனற்றதாக ஆக்கிவிடக்கூடாது.
எனவே நமது பொதுநல மன்றங்கள், ஜமாத்துகள் இதை நம் மக்களுக்கு தெளிவுபடுத்தி , முஸ்லிம்களின் ஆதரவு சக்திகளை வெற்றிபெற செய்யவேண்டும்.
6. Letter posted byJahir Hussain VENA (Bahrain)[14 September 2013] IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 30094
i do not know what stated on attached லெட்டெர். i dont know hindi.. ..but some how understood that Advani Ji utilized Govt letter head for their internal
Just Imagine if they come to rule? What will happend next?
7. .நம்புனித மார்க்க வாழ்வுரிமையை காப்பாற்ற இன்று முதல் களத்தில் இறங்குவோமாக!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (YANBU)[14 September 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30096
காங்கிரஸில் பல குளறுபடிகள் இருந்தாலும் சில விஷியங்களில் நமக்கு உடன்பாடில்லாவிட்டாலும் நம்பிக்கையில்லா வாக்குப்பதிவில் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்க மனம் வரவில்லை,ஒருவேளை நாம் நம்பிக்கை இல்லாதீர்மானத்தை ஆதரித்து அதனால் காங்கிரஸ் தோற்குமானால்,அந்த சந்தடி சாக்கில் மதவாதசக்தி,மதவெறி கூட்டம் ஆட்சிக் கட்டிலுக்குவர வாய்ப்பாகிவிடும்!
விளைவு, சிறுபான்மை சமுதாயத்தின் சின்ன சின்ன சுதந்திர குரல்வலையங்கள் நெறிக்கப்பட்டு பெரும்பான்மை என்ற பேரினப்பார்ப்பன சாம்ராஜ்யம் இப்பாரத மதசார்பற்ற கொள்கையை மண்ணில் தோண்டி புதைத்து விடுவார்கள் என்று தி.மு.க தலைவர் கலைஞர் கூறி இருக்கிறார்!
இப்பொழுது நரபலி மன்னன் நரேந்திரமோடியை பிரதமர் பதிவிக்காக (பட்டு குஞ்சமாக) வேட்பாளர் என்று அறிவித்து இருக்கிறது BJP இத் தருணத்தில் தி.மு.க, அ.தி.மு.க வின் நிலைப்பாடு என்ன? .
காங்கிரசில் பல விஷியங்களில் நமக்கு உடன்பாடு
இல்லாவிட்டாலும் நம் உயரினும் மேலான புனித மார்க்கத்திற்கு மாற்றமாக பலநேரங்களில் செயல்படாத கட்சியாக காங்க்ரஸ் இருப்பதனாலும்,காங்க்ரஸ்க்கு மாற்றாக வேறு எந்த மதசார்பற்ற கட்சியும் வலுவில்லாமல் இருப்பதாலும்,
சிறுபான்மை சமுதாயமகிய நாம் நரபலி மன்னன் மோடிக்கெதிராகவும்,அவரை எதிர்க்கும் அசுர சக்தியான காங்க்ரஸ்க்கு ஆதரவாகவும் செயல்பட வேண்டும்.
நம்எதிர்ப்பை நேரடியாக காட்டி,இஸ்லாமிய சமுதாயம் ஏனோ தானோ அல்ல,ஆட்சி சக்கரம் உருள அச்சாணியைப்போன்று அனேக இடங்களில் வெற்றியை நிர்ணயம் செய்யும் சக்தியாக விளங்குகிறது என்பதை அக்காவிக்கூட்டத்திற்கு கட்டாயம் காட்டுவது நமது கடமையாகும்! .
இந்த நேரத்தில் சில இஸ்லாமிய அமைப்பு என்ற போர்வையில் தங்கள் சுயநல விளம்பர,வளர்ச்சிக்காக நாம் மதி மயங்கும் மனோகர வார்த்தைகளால்
மூளைச்சலவை செய்து,காங்க்ரஸின் ஒரு சில
நம்சமுதாய எதிர் நடவடிக்கைகளை கோடிட்டுகாட்டி காங்கிரஸை எப்படியும் எதிர்த்தாக வேண்டும் என்ற வெறி உணர்வை ஊட்டுவார்கள்,
ஒருவேளை அம்முயற்சியில் அவர்கள் வெற்றிப்பெற்றால்,அந்த வெற்றி நரபலி நாயகன் மோடிக்கு நேரிடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்து விட்டோம் என்பதுதான் எதார்த்தமான உண்மை!
இந்த விஷியத்தில் எந்த ஆன்மீக அறிஞ்சர்களோ,
சமுதாய அமைப்பு தலைவர்களோ காங்கிரஸ்க்கு எதிராக செயல்பட தூண்டும் சமரசத்தை முன் வைத்தால்,
நம் புனித மார்க்கத்தை இப்பாரத மண்ணில் காப்பாற்ற அந்த சமுதாய அமைப்பு சுயநலவாதிகளை கிஞ்சித்தும் கண்டு கொள்ளவேண்டாம்.எம்மார்க்கத்தை காப்பாற்ற எங்களுக்குத்தெரியும் என்று சுயமாக சிந்தித்து,
நம்புனித மார்க்க வாழ்வுரிமையை காப்பாற்ற இன்று முதல் களத்தில் இறங்கி செயல்படுவோம்
வெற்றியை வல்ல நாயகன் தந்தருள்வானாக ஆமீன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
8. Re:... posted byஅப்துல் லத்தீஃப் (காயல்பட்டணம்)[14 September 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 30101
திரு.அத்வானி அவர்களே .ஒரு பிரதமர் பதவி (இன்னும் சொல்லபோனால் பிரதமர் வேட்பாளர் பதவி மட்டுமே) கிடைக்கவில்லை என்பதற்காக இவ்வளவு விரக்தி அடைகிறீர்களே. பாபர் மசூதி இடிபட்டவுடன் எத்தனை மக்களின் உயிர்,உடமைகள் (இந்துக்கள் உட்பட) சூறையாடபட்டன.எந்த பதவி இதற்கெல்லாம் உந்துதலாக இருந்ததோ அந்த பதவியை இப்போது நெருங்ககூட முடியவில்லை.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.அந்தந்த குடும்பத்தினருக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும்.”முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” நாளை திரு.வருண் மேலே வரும்போது திரு.மோடிக்கும் இதுதான் நிலைமை.
திரு.கக்கன் போன்றோர் அமைச்சர் பதவியை தாண்ட முடியவில்லை.அந்த பதவி சுகத்தின் நிழலை கூட அனுபவிக்கவில்லை.ஆனால் இவரின் வாழ்க்கை வரலாறையும், இவரது இறுதிக் கட்டத்தையும் படித்து பார்க்கும் போது கண்ணீர் வருகிறது....
அப்படி ஒரு தலைவன் இல்லை இல்லை பல தலைவர்கள் வரும் போது இன்ஷா அல்லாஹ் என் தேசம் திரு.அல்லாமா இக்பால் பாடியது போன்று (சாரே ஜஹான்சே அச்சா ஹிந்து சிதாரா ஹமாரா ) இப்பூவுலகிலே மிக அழகான தேசமாக காட்சி அளிக்கும். அந்த தேசத்தில் ஊழல் இருக்காது, ரெத்தவெறி, மதவெறி இருக்காது,தீவிரவாதம் இருக்காது. என் இந்திய தேசத்தில் அன்பு மட்டுமே இருக்கும்.
9. Re:... posted byS.M.I.Zakariya (chennai)[14 September 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 30102
இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தான் ஏதோ மோடி பிரதமர் ஆகிவிட்டது போல் கூக்குரலிடுகின்றன என்றால் நீங்கள் வேறு இந்த செய்தியை போடவேண்டுமா. மோடிக்கும் காயல்பட்டினத்துக்கும் என்ன சம்பந்தம்?
இருபது mp களை மற்றுமே அடக்கிய ஒரு மாநிலத்தின் முதல்வர் தான் மோடி. கிட்டத்தட்ட 170 எம்பிகளை மற்றுமே வென்று மற்ற மாநில கட்சிகளின் தயவில் கிட்டத்தட்ட ஒரு ஆறு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர். அவ்வளுதான். அதுவும் கார்கிலில் இவர்கள் கோட்டை விட்ட இடத்தை திரும்ப பிடித்ததிற்கு கொடுத்த build up இனால் கிடைத்த வெற்றியில் 5 வருடங்கள் ஆட்சியை ஒட்டினார்கள். மற்ற படி ஒன்றும் பெரிதாக இல்லை இவ்வாறு இருக்க நீங்கள் வேறு இதைபோட்டு எரிச்சலை கிளப்பாதிர்கள்
ஒரு வழியாக பாரதிய ஜனதாவும் அதற்கு முட்டுகொடுக்கும் ஆதிக்க சக்திகளின் மீடியாவும் சேர்ந்து நடத்திய நாடகம் நேற்று முடிவிற்கு வந்து மோடி அட்கட்சியின் பிரதம வேட்பாளராக நியமிக்கபட்டிர்கிறார். இது ராஜ்நாத்சிங்கோ அல்லது அத்வானியோ முடிவெடுக்க கூடிய விஷயம் அல்ல மாறாக அதை ஆட்டுவிக்கும் RSS அன்றே மோடியை பிரதம வேட்பாளராக முடிவெடுத்ததை இன்றைய ஆதிக்க மீடியா உலகம் அதை பில்ட் அப் செய்து மோடியை இந்தியாவின் ஹீரோவாக காட்டுவதற்காக அத்வானி எதிர்ப்பு - சுஷ்மா எதிர்ப்பு என்றெல்லாம் பரபரப்பான செய்தியாக்கி இறுதியில் இந்த மோடியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பை ஏதோ இந்திய பிரதமர் தேர்வு போல் பரபரப்பாக்கி செய்தி வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஒரு நாட்டின் பிரதமராக மன்மோகனோ இல்லை வாஜ்பாயோ ஆகும் போது இருந்த முக்கியத்துவத்தை விட பலமடங்கு இதற்கு கொடுத்து பாசிச பத்திரிக்கை விரித்த வலைக்கு பாவம் நம் வலைத்தளம் வரை வீழ்த்து தான் இருக்கிறது ..
மதகலவரங்கள் மூலம் முஸ்லிகளை மற்ற சமூகத்தில் இருந்து பிரித்து அதையே தனது வாக்குகளாக ஆக்கி கொள்ளும் வெறி தந்திரம் இது தான் மோடி வெற்றியின் ரகசியம் .. அதற்கு சமீபத்திய உதாரணம் உபி கலவரம்... மோடியின் ஆஸ்தான கொலைதிட்ட ஆலோசகர் அமித் ஷா உபி யின் தேர்தல் பொறுப்பாளராக மோடியால் நியமிக்க பட்டு 5 மாதங்களில் ஜாட் இன மக்களையும் - முஸ்லிம் களையும் மோதவிட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை குடித்து இதையே முஸ்லீம் அல்லாதவரின் ஒட்டு வங்கியாக மாற்ற முயற்சித்து கொண்டு இருக்கிறார். இவருடைய இந்த தந்திரம் எங்கெல்ல்லாம் அவருக்கு இழந்த இமேஜை பிடிக்க வேண்டுமோ அங்கெல்லாம் பயன்படுத்த தவறமாட்டார்.
ஆனால் ஆளும் காங்கிரஸ் இவருடைய போலி பிரச்சாரத்தையும், மாயையை முறியடிக்கவும் தவறி விட்டு,தன் சொந்த செல்வாக்கை கூட இழந்து ஊழலால் அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிர்கிறது..இந்த நிலையில் நமக்கு மோடியின் மதவாதம் என்று வரும் பொது, ஊழலோ குடும்ப அரசியலோ ஒரு பொருட்டு இல்லை! மன்மோகன் சிங் இல்லை வேற எந்த மண்குதிரையை நிறுத்தினாலும் வெற்றி பெற வைப்போம். நம் சமூதாய கட்சிகள் எப்போதும் போல் 1-2 சீட்டுக்கு அடித்து கொண்டு 50 கட்சியாக பிரிந்து நம் சமுதாய ஓட்டை சிதறவிடாமல் இந்த மோடியையும் மோடிக்கு கொடி பிடிக்கும் கட்சியை தோற்கடிப்பதிலாவது ஒன்று கூடுவார்கள் என்று நம்புவோம்.
12. ஒரு அரக்கன் இந்தியாவின் கதாநாயகனா...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30110
ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனையும்,
ஆயிரம்... ஆயிரம் கற்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து, சிசுவை கொன்று, தாயையும் கற்பழித்து கொன்ற வர்க்கத்தின் கதாநாயகனா... BJP யின் பிரதம வேட்பாளராம்..
இதை விட கேவலம் நாட்டிற்கு உண்டா...?
மத சார்ப்பற்ற நாட்டின் பிரதமர் வேட்பாளர் ஒரு மத வெறியனா? என்பது நடுநிலையாளர்களின் கருத்து
மூழ்கிக்கொண்டிருக்கும் இந்தியாவை யாராவது கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா..? என்று காத்திருக்கும் மக்களுக்கு மிக பெரிய ஏமாற்றமே..
இறக்கம் உள்ளவன் யாரும் அன்று கலவரத்தை தூண்டிய மோடி என்கிற அரக்கனை தூக்கிலிட வேண்டும் என்று துடிப்பார்கள்,
ஆனால் ஒரு கூட்டம் அந்த அரக்கனை ஒரு கதாநாயகன் போல் தோற்றத்தை ஏற்படுத்தி அதே போன்று கலவரத்தை இந்தியா முழுவதும் நடத்த வேண்டும் என்று வெறிபிடித்து திரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross