ஆதரிப்போம் தமிழ் 'தி ஹிந்து' நாளிதழை. posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[19 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30199
'The Hindu' ஆங்கில இதழின் கடந்த 30 வருட வாசகன் நான். கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் மதவாத பாசிச சக்திகளை, அவர்களின் சூழ்ச்சிகளை அம்பலபடுத்துவதில் நம் சமுதாய பத்திரிக்கைகளை விட, தலையங்கம், ஆராச்சியாளர்கள் கட்டுரைகள் என்று முன்னிலை வகித்தவர்கள். பாபர் மஸ்ஜித் இடிப்பு ஆகட்டும், குஜராத் கலவரமாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், பாடத்திட்டத்தில் காவிமயமாக்கள், தற்போது நடைபெற்ற முசபார்நகர் கலவரம் ஆகியவற்றில் முஸ்லிம்களை கருவறுத்த சம்பவங்களின் நடுநிலையான பதிவுகள் நம் சமுதாயத்திற்கு ஆறுதல் அளித்த விஷயங்கள்.
கட்டுரையாளர் கூறியது போல், தமிழில் 'தினமணி' தடம்புரண்ட பின் நமக்கு ஆதரவாக இல்லையன்றாலும் நடுநிலையான தினசரி பத்திரிகை இல்லை என்ற குறையை 'தி ஹிந்து' தமிழ் நாளிதழ் போக்கும் என்று நம்பலாம். 'தி ஹிந்து' ஆங்கில நாளிதளின் கொள்கையை பின்பற்றினால் தமிழ் பேசும் நம் மாற்று மத சகோதரர்களுக்கு உண்மை நிலை தெரியவரும்.
நல்லதையே நினைத்து வரவேற்று வாழ்த்துவோம். நம் சமுதாய மக்கள் மற்ற தரமற்ற தமிழ் தினசரிகளை வாங்குவதை தவிர்த்து 'தி ஹிந்து' தமிழ் நாளிதழை வாங்கி ஆதரவு நல்குவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross