Re:...அணுமின் நிலையங்களே அதிக பயனுள்ளது. posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[20 September 2013] IP: 218.*.*.* China | Comment Reference Number: 30222
தூத்துக்குடியில் 1970 ல் திட்டமிடப்பட்டு 1992 முடிய தலா 210 MW வீதம் 5 அலகுகள்.மொத்தம் 1050 MW .20 ஆண்டுகளில். அனல் மின்நிலையம். மிகப்பெரிய நிலப்பரப்பில் அனல் மின்நிலையம். காற்று மாசுபாடு.நிலக்கரிக்கு வெளிநாட்டை உறுதியில்லாமல் சார்திருக்கும் நிலை. அதிக உற்பத்தி செலவு.இதைதான் பெரும் சாதனை என்கின்றனர்.
கூடங்குளம் அணு மின் நிலையம். மத்திய அரசின் திட்டம்., ஒவ்வொன்றும் 1000 MW வீதம் 2 அலகுகள் மொத்தம் 2000 MW . உற்பத்திக்கு தயார் நிலையில். ரஷ்யாவின் எரிபொருள் உத்திரவாதத்துடன் . குறைந்த உற்பத்திச்செலவு. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இதுவும் தாமதம்தான் . 1975 களில் போடப்பட்ட ஒப்பந்தம். தற்போதுதான் உற்பத்திநிலைக்கு வந்திருக்கிறது. இதேபோன்று இன்னும் 6 அலகுகள் . தலா 1000 MW வீதம் ஒத்துழைப்பளிக்க ரஷ்யா முன்வருகிறது. செயல் வடிவம் கொடுத்தால் மொத்தம் 8000 MW மின் உற்பத்தி. அரசு இதைப்போன்ற அணுமின் நிலையங்களில் கவனம் செலுத்தினால் , மின் உற்பத்தியில் நம் நாடு வெகு விரைவாக தன்னிறைவடையும்.
இம்மாதிரி திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமையும் முதலீடும் , மாநில அரசு ஒத்துழைப்பும் கொடுக்கலாமே! மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி அமைந்தால் இது போன்ற திட்டங்கள் வேகமாக செயல்வடிவம் பெரும். நாமும் பயன் பெறுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross