வெளிநடப்பு இல்லாத கூட்டமாக அமைய இறைஞ்சுகிறேன் posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[26 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30367
ஆகஸ்ட் மாதம் நடந்த அவசர கூட்டத்தில், ஒரு தீர்மானம் ஒருமனதோடும், மற்றொரு தீர்மானம் பெரும்பான்மையோடும் நிறைவேற்ற ஒத்துழைத்த தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்கள், இந்த மாத சாதாரண கூட்டத்திலும் அனைத்து தீர்மானங்களும் அதன் தன்மை அடிப்படையில் நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுக்க, என்னை போன்ற நடுநிலைவாதிகள் எதிர்பார்கின்றனர்.
கல்லூரி மாணவர்களின் பாஷையில் சொல்லுவதென்றால், 2 மாத கூட்ட தீர்மானங்கள் arrears உள்ளது.
அதில் உறுப்பினர்கள் மற்றும் தலைவி கொண்டுவந்த நம் நகருக்கு தேவையான பல நல்ல தீர்மானங்களும் உள்ளன. குறிப்பாக நான் சார்ந்த 17 -ம் வார்டில் மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க மெயின் குழாய் அமைக்க நிதி ஒதுக்க கோரும் தீர்மானம்.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், நகராட்சி பணத்தை கையாடல் செய்த சம்பவங்களும் நடந்தன.
இந்த தீர்மானங்கள் எல்லாம் உங்களால் (தலைவி மற்றும் உறுப்பினர்கள்) கோரப்பட்டது தான். அதை நிறைவேற்ற வேண்டியது உங்கள் கடமையும் கூட. உங்களுக்குள் ஆயிரம் மனக்கசப்புகள், பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சனைகளில் மக்களின் தேவைகளை பலிக்கிடா ஆக்கிவிடாதீர்கள்.
எல்லாவற்றிகும் மேலாக மக்களாகிய நாங்கள், உங்களை, எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத்தான் தேர்ந்தெடுத்துள்ளோம். அந்த அமானிதத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதியாக உள்ள உங்கள் அனைவர் மீதும் கடமை.
இந்த மாத கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்து கொண்டு, வெளிநடப்பு செய்யாமல், நம் நகருக்காக தேங்கி இருக்கும் நல திட்டங்களுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றி ஒத்துழைக்கும்படி தலைவி மற்றும் உறுப்பினர்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross