Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:21:34 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: ஓமன் கா.ந.மன்ற செயலாளர் பேரா. ஹமீத் சுலைமான் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மன்னிப்பு கேட்டேன்...
posted by S.K.Salih (Kayalpatnam) [27 September 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30407

நல்ல மனிதர் ஒருவரை நாம் இழந்திருக்கிறோம். குரல் உயர்த்திப் பேசத் தெரியாதவர்.

தன் பேத்தியைக் கையில் பிடித்துக்கொண்டு நகரின் பல பகுதிகளிலும் அவர்கள் நடமாடியதும், கடற்கரையில் பேத்தியுடன் காற்று வாங்கியதும் இன்றளவும் என் கண்ணுக்குள்ளேயே நிலைத்திருக்கிறது.

தன் இளைய மகனான தம்பி ஷிஹாபுத்தீனின் திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் என்னிடம், “வாப்பா, என் மகனுக்கு இன்ன தேதியில் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது... நீதான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கனும்” என்றார்கள். “இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக வருவேன்” என்றேன்.

இடையில் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் எனக்கு நினைவூட்டவும் தவறவில்லை. திருமண நாளுக்கு 10 நாட்கள் முன்பாகக் கூட எனக்கு நினைவூட்டினார்கள். இருந்தும், தம்பியின் திருமண நாளன்று நான் அழைப்பை மறந்து இருந்துவிட்டேன். என் பங்கேற்பை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும், நான் வராத காரணத்தால் வருத்தம் ஏற்பட்டுள்ளது. ஒருவாறாக நிகழ்ச்சியும் நிறைவுற்றது.

பின்னர் எனது மறதியை உணர்ந்த நான், உடனடியாக அவர்களிடம் சென்று, “மாமா! நான் மறந்துவிட்டேன்... என்னை மன்னித்து விடுங்கள்...” என்றேன். “உனக்கு முடியலைன்னா மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டியா?” என்றார்கள். “அஸ்தக்ஃபிருல்லாஹ்! நான் மிகவும் ஆவலாகவல்லவா இருந்தேன்...? என் பாழாய்ப்போன மறதிதான் இந்நிகழ்ச்சியில் என்னைக் கலந்துகொள்ள விடாமல் தடுத்துவிட்டது” என்று சொன்னபோது, ஒரு பெரிய மனிதரின் வருத்தத்திற்கு ஆளாகிவிட்டோமே என்ற எண்ணத்தில் என் கண்களும் பணித்தன.

உடனடியாக என்னை ஆசுவாசப்படுத்திய அவர்கள், “சரிப்பா... எல்லாம் சிறப்பாக முடிந்தது. எது எது எப்படி நடக்கனும்னு இருக்குதோ அப்படித்தான் நடக்கும்” என்று தன் வருத்தத்தையும் மறந்து பெருந்தன்மையுடன் கூறினார்கள்.

அன்று நான் படித்த பாடம்: யார் எதற்காக என்னை அழைத்தாலும், “நிகழ்வு நாளன்று தயவுசெய்து எனக்கு நினைவூட்டிக் கொள்ளுங்கள்... அதான் சொல்லிவிட்டோமே என்று இருந்து விடாதீர்கள்... மறந்துவிட்டால் நான் பொறுப்பல்ல!” என்று சொல்லும் பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளேன்.

கருணையுள்ள அல்லாஹ், அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக... ஆமீன்.

(அக்குடும்பத்தில் அனைவருமே என் மீது பாசம் கொண்டவர்கள்...) அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் என் நண்பன் ஜாஃபர் ரியாஸுத்தீன் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...

நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகளுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தினர்
கொச்சியார் தெரு
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved