ஓமன் காயல் நல மன்ற செயலாளர் பேராசிரியர் ஹமீத் சுலைமானின் மாமனார் - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஜெ.அக்பர், செப்டம்பர் 26 வியாழக்கிழமை இரவு 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76.
அன்னார், மர்ஹூம் ஜாஃபர் என்பவரின் மகனும்,
மர்ஹூம் ஷிஹாபுத்தீன் என்பவரின் மகளது கணவரும்,
மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.மூஸா, ஹாஜி எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோரின் சகோதரி மகனும்,
மர்ஹூம் ஜெ.எம்.ஏ.காதர் என்ற ஜமக், ஜெ.செய்யித் முஹம்மத், ஜெ.சாமு, ஜெ.கபீர் (கைபேசி எண்: +91 94435 81597), ஜெ.முஹம்மத் அலீ, ஜெ.அபூபக்கர் (கைபேசி எண்: +91 99527 34929), ஜெ.முஹம்மத் ஹஸன் ஆகியோரின் சகோதரரும்,
ஆயிஷா என்பவரின் கணவரும்,
பொறியாளர் ஷெய்கு அலீ, திருநெல்வேலி கேலக்ஸி மருத்துவமனை அதிபர் டாக்டர் மஹ்பூப் சுபுஹானீ ஆகியோரின் மச்சானும்,
நளீஃபா ஃபாத்திமா, ரயீஸா ஆமினா, ஏ.ஜாஃபர் ரியாஸ்தீன் (கைபேசி எண்: +91 88705 17141), ஏ.ஷிஹாபுத்தீன் (கைபேசி எண்: +91 96775 54151) ஆகியோரின் தந்தையும்,
ஷேக் அலீ (கைபேசி எண்: +91 99402 32401), ஓமன் காயல் நல மன்ற செயலாளர் பேராசிரியர் எஸ்.எம்.ஹமீத் சுலைமான் (கைபேசி எண்: +968 9400 6588) ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் ஜனாஸா தொழுகையை வழிநடத்த, பிரார்த்தனையைத் தொடர்ந்து, அப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:25 / 03.10.2013] |