சென்னையில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியருக்கான நான்காவது விமானம் (AI-5253) செப்டம்பர் 25 அன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 26) அதிகாலை 3:10 மணி அளவில் சவுதி அரேபியா ஜித்தாஹ் விமான நிலையத்தை அடைந்தது. இதில் 275 பயணியர் இருந்தனர்.
இதில் -
*** கிளை 3, மக்தப் 48, கட்டிடம் எண் 60 (பச்சை நிறம் பிரிவு) இல் 40 பயணியரும்,
*** கிளை 3, மக்தப் 47, கட்டிடம் எண் 57 (பச்சை நிறம் பிரிவு) இல் 230 பயணியரும்,
*** கிளை 11, மக்தப் 30, கட்டிடம் எண் 378 (அசீசியா பிரிவு) இல் 5 பயணியரும்,
தங்கியுள்ளனர்.
சென்னையில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியருக்கான ஐந்தாவது விமானம் (AI-5235) செப்டம்பர் 26 அன்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் 26 காலை 7:10 மணி அளவில் சவுதி அரேபியா ஜித்தாஹ் விமான நிலையத்தை அடைந்தது. இதில் 275 பயணியர் இருந்தனர்.
இதில் -
*** கிளை 3, மக்தப் 48, கட்டிடம் எண் 60 (பச்சை நிறம் பிரிவு) இல் 20 பயணியரும்,
*** கிளை 11, மக்தப் 30, கட்டிடம் எண் 378 (அசீசியா பிரிவு) இல் 255 பயணியரும்,
தங்கியுள்ளனர்.
|