நகரில் வெப்ப வானிலை அதிகரித்தும், மழையின்மையால் நிலத்தடி நீர் குறைந்தும் வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலை 07.30 மணியளவில் சிறப்புப் பிரார்த்தனையும், தொழுகையும் நடைபெற்றது.
காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ மழைத் தொழுகையின் தேவை மற்றும் அதன் முறைகள் குறித்து விளக்கவுரையாற்றியதுடன், தொழுகையையும் வழிநடத்தினார்.
உரையைத் தொடர்ந்து, அனைவரும் தமது இரு புறங்கைகளையும் நீட்டியவாறு - மழை வேண்டி தமக்குள் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து தொழுகை நடைபெற்றது. அனைவரும் தாம் அணிந்திருந்த மேலாடைகளை (சட்டை) மாற்றியணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், நகரின் ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
‘தேக்’ முஜீப்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 21:13 / 28.09.2013] |