நடப்பு காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி, விஸ்டம் பப்ளிக் பள்ளியின் சார்பில் இம்மாதம் 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கன்னியாகுமரிக்கு இன்பச் சிற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளியை நிர்வகிக்கும் விஷன் எஜுகேஷனல் அறக்கட்டளை தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில், அறங்காவலர் ஜெ.செய்யித் ஹஜன், தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா மற்றும் ஆசிரியையர் ஆகியோர், பள்ளியின் சுமார் 50 மாணவ-மாணவியரை இன்பச் சிற்றுலா அழைத்துச் சென்றனர்.
காலை 06.00 மணிக்கு, காயல்பட்டினம் பிரதான வீதி - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி முனையிலிருந்து புறப்பட்ட சிற்றுலா சிறப்புப் பேருந்தை, மாணவ-மாணவியரின் பெற்றோர் வழியனுப்பி வைத்தனர்.
(குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!)
கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில், நாங்குநேரி காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட கல்வி முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இடங்களை மாணவ-மாணவியர் கண்டு களித்தனர். ஒவ்வோர் இடத்தின் சரித்திர முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு ஆசிரியர் குழுவினர் விளக்கினர்.
கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலாத் தலங்களையும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும் பார்த்து ரசித்த சிற்றுலாக் குழுவினர், படகுச் சவாரி, திற்பரப்பு அருவியில் இன்பக்குளியல், பத்மநாபபுரம் புராதன அரண்மனை ஆகிய இடங்களுக்கும் சென்று வந்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனையில் மாணவ-மாணவியர் லுஹ்ர், அஸ்ர் தொழுகைகளை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றினர்.
படங்களில் உதவி:
J.செய்யித் ஹஸன் |