காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில், தமிழகம் சார்பாக பங்கேற்கவுள்ளது.
சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக, இவ்வணியினர் இம்மாதம் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாளை மாலையில், செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலமாக சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர். போட்டி நாட்கள் நெருங்குவதையொட்டி அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (செப்டம்பர் 28) மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் வீரர்கள் தம் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அவர்களுக்கு - காயல்பட்டினம் டாஸ் ஹோம் ஸ்டைல்ஸ், பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட், G-Five வி.எஸ்.ட்ரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் அனுசரணையிலும், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் அன்பளிப்பிலும், கள உடை (ஜெர்ஸி) பூட் (பாதணி), பயணப் பை உள்ளிட்ட உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர்கள் வேலாயுதம், இஸ்மாஈல், பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, அதன் செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் அதிபர் பிரபு ஹபீப் முஹம்மத், அதன் பொறுப்பாளர் ஷேக்னா லெப்பை, டாஸ் ஹோம் ஸ்டைல்ஸ் அதிபர் யு.நவ்ஃபல் உள்ளிட்டோர், வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
நிறைவில், நிகழ்ச்சியில் அங்கம் வகித்தோர், ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும், நிறுவனங்களால் வழங்கப்பட்ட பல வண்ணக் கள உடைகளையணிந்த வீரர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். படங்கள் வருமாறு:-
(படங்களைப் பெரிதுபடுத்திக் காண அவற்றின் மீது சொடுக்குக!)
இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், மேலாளர் மற்றும் பயிற்சியாளர் குறித்த முழு விபரங்கள்:-
தகவல்:
M.L.ஹாரூன் ரஷீத்
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 05:05 / 29.09.2013]
|