செப்டம்பர் 27 அன்று - சுமார் 2.5 மணி நேரம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், 11 பொருட்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டது. எஞ்சிய 92
பொருட்கள், திங்கள் அன்று (செப்டம்பர் 30) விவாதிக்கப்படும் என கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
விவாதிக்கப்பட்ட பல விஷயங்களில், இரு விஷயங்கள் - நகர்மன்றத் தலைவருக்கு, மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 [SCHEDULE III, RULE 2(3)], வழங்கியுள்ள - கூட்டப்பொருளுடன், தலைவரின் குறிப்பு இணைப்பது சம்மந்தப்பட்டது ஆகும்.
On any subject included in the agenda, the chairman as well as the commissioner shall have the right of recording his views in a note and such note shall be circulated to the councillors or placed before or at the time of the consideration of such subject by the council
செப்டம்பர் மாத கூட்ட அஜெண்டாவில் பொருள் எண்கள் 2 முதல் 28 வரை, ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்ட பொருட்களாகும். கூட்ட அஜெண்டாவில் நான்காவதாக இடம்பெற்ற (ஜூன் மாத) பொருள் - நகராட்சியின் ரோஜா சுய உதவிக்குழு ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணி நீட்டிப்பு குறித்து ஆகும்.
ஆகஸ்ட் - செப்டம்பர் கூட்ட அஜெண்டாவிலிருந்து ...
இது குறித்து கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள், தலைவி குறிப்பிட்டுள்ள இரு ஊழியர்கள் குறித்த புகார் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தான்
எழுந்தது. அப்படி இருக்க, எவ்வாறு தலைவி ஜூன் மாத கூட்டப்பொருளில் அந்த இரு ஊழியர்கள் குறித்து கருத்து எழுதினார். இது அவரின்
காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது என கூறினர். ஆனால் நிகழ்வு என்ன?
ஜூன் மாதம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கூட்டப்பொருளில் 4வது பொருள்
ஜூன் மாதம் நடைபெற இருந்த கூட்டத்திற்கு முன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கூட்டப்பொருளில் தலைவி குறிப்பு இடம் பெறவில்லை என்பதனை காணலாம்.
உறுப்பினர்கள் ஜூன் மாதக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தததால், அதே பொருள் - ஆகஸ்ட்
மாதக்கூட்ட அஜெண்டாவிலும், அக்கூட்டதையும் உறுப்பினர்கள் புறக்கணித்ததால் செப்டம்பர் மாத கூட்ட
அஜெண்டாவிலும் இடம் பெற்றது.
மேலும் - நகர்மன்றத் தலைவரின் மார்ச் மாத கோரிக்கையின் அடிப்படையில் மே மாதமும், அதன் பிறகு ஜூலை மாதமும் உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கை அதிகாரிகள், நகராட்சி கணக்குகளை ஆய்வு செய்ததில் பல குறைப்பாடுகளையும், முறைக்கேடுகளையும் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்னரே, ஆகஸ்ட் மாத அஜெண்டாவில், ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்ட கூட்டப்பொருள் எண் 4 வுடன், நகர்மன்றத் தலைவியின் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றொரு நகர்மன்றத் தலைவர் குறிப்பு - ஏப்ரல் 27 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்திற்கான அஜெண்டாவில் இடம்பெற்ற, தெரு விளக்குகளை தனியார் மூலம் பராமரிப்பது குறித்ததாகும்.
ஏப்ரல் மாத கூட்டப்பொருளில் இருந்து ...
தெருவிளக்குகளை பராமரிக்க ஆண்டொன்றுக்கு 20 லட்ச ரூபாய் என்றும், ஒவ்வொரு ஆண்டும் அதில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டு,
மூன்றாண்டுகளுக்கு தெரு விளக்குகளை பராமரிக்க - ரூபாய் 65 லட்சத்திற்கும் மேலாக, நகராட்சி பொறியாளர்களால் - மதிப்பீடு
தயாரிக்கப்பட்டிருந்தது.
இப்பொருளுக்கு - குறிப்பு எழுதிய நகர்மன்றத் தலைவர், பிற நகராட்சிகளை பார்க்கும் போது, காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்களால்
தயாரிக்கப்பட்ட மதிப்பீடு மிகவும் அதிகமாக உள்ளது என்று கருத்து பதிவு செய்திருந்தார். இருப்பினும் - பெருவாரியான உறுப்பினர்கள், மதிப்பீட்டை
அங்கீகரிக்க கூறவே, அத்தீர்மானமும் (தீர்மான எண் 460) நிறைவேற்றவும் பட்டது.
நகராட்சிகளின் எந்த சேவையையும் தனியார் மயமாக்கும் முன், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் முன் அனுமதி
பெறப்படவேண்டும். அதன்படி - திருநெல்வேலியில் உள்ள மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் மூலம் அனுப்பப்பட்ட நகராட்சியின் தீர்மானம்,
நகர்மன்றத் தலைவரின் ஆட்சேபனை குறிப்பினால் - திருப்பி அனுப்பப்பட்டது.
மதிப்பீட்டு தொகை அதிகமாக உள்ளது குறித்து சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் அதிகாரிகளுக்கும் நகர்மன்றத் தலைவர் தகவல்
அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில், காயல்பட்டினம் நகராட்சியின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டினை ஆய்வு செய்த, நகராட்சி
நிர்வாகத்துறையின் சென்னை அதிகாரிகள், மதிப்பீட்டு தொகை அதிகம் என்பதை உறுதி செய்து, திருத்தப்பட்ட மதிப்பீட்டு தொகையை
அனுப்பியிருந்தனர். அந்த தொகையே மீண்டும் - செப்டம்பர் மாதம் கூட்டத்தில், பொருள் எண் 88 ஆக இடம்பெற்றது.
செப்டம்பர் மாத கூட்டப்பொருளில் இருந்து ...
இதன் மூலம் குறைந்தது - நகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு - மக்கள் வரிப்பணம் - 4 லட்ச ரூபாய் மிச்சமாகும். |