காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாதத்திற்கான சாதாரண கூட்டம் இம்மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணிக்குத் துவங்கி, மாலை 06.30 மணி வரை நடைபெற்றது. அக்கூட்டத்தில், மொத்தமுள்ள 103 கூட்டப் பொருட்களுள் 11 கூட்டப் பொருட்கள் குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்களியற்றப்பட்ட நிலையில், நேரமின்மை காரணமாக, மறுதேதி அறிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
இந்நிலையில், எஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்களியற்றுவதற்காக, இன்று (செப்டம்பர் 30 திங்கட்கிழமை) மாலை 03.00 மணிக்கு நகர்மன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் கூட்டம் மாலை 3:45 மணி அளவில் துவங்கியது. மாலை 7:15 மணி வரைக்கும் நீடித்த இக்கூட்டத்தில், கூடுதலாக 39 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.
எஞ்சிய 53 பொருட்களும், நாளை (அக்டோபர் 1) காலை 10 மணி முதல் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன், பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், தவிர்த்து மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:51 / 01.10.2013] |