காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாதத்திற்கான சாதாரண கூட்டம் இம்மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணிக்குத் துவங்கி, மாலை 06.30 மணி வரை நடைபெற்றது. அக்கூட்டத்தில், மொத்தமுள்ள 103 கூட்டப் பொருட்களுள் 11 கூட்டப் பொருட்கள் குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்களியற்றப்பட்ட நிலையில், நேரமின்மை காரணமாக, மறுதேதி அறிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
இந்நிலையில், எஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்களியற்றுவதற்காக, இன்று (செப்டம்பர் 30 திங்கட்கிழமை) மாலை 03.00 மணிக்கு நகர்மன்றக் கூட்டம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இம்மாதம் 27ஆம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அக்கூட்டத்தின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக! |