காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில், தமிழகம் சார்பாக பங்கேற்கவுள்ளது.
சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக, இவ்வணியினர் இன்றிரவு 07.15 மணிக்கு, செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலமாக சென்னை சென்று, அங்கிருந்து - தமிழ்நாடு விரைவுத் தொடர்வண்டி மூலமாகப் புறப்பட்டு, அக்டோபர் 02ஆம் தேதி காலை 07.00 மணிக்கு டெல்லியைச் சென்றடைகின்றனர்.
டெல்லி புறப்படும் அணியினருக்கு வழியனுப்பு விழா, இன்று மாலை 05.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது. எல்.கே.மேனிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், ஆட்சிக்குழு உறுப்பினர்களான எல்.டி.இப்றாஹீம், எல்.கே.லெப்பைத்தம்பி, உடற்கல்வி ஆசிரியர்கள் வேலாயுதம், இஸ்மாஈல், பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் ஆகியோரும், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், மூத்த நிர்வாகி ஹாஜி பாளையம் முஸ்தஃபா உள்ளிட்ட அங்கத்தினரும், வீரர்களை வாழ்த்திப் பிரார்த்தித்து வழியனுப்பி வைத்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டனர். வீரர்களை வாழ்த்திப் பேசிய நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவுக்குள் வீரர்கள் அனைவரின் குழுப்படத்தைப் பதித்த வாழ்த்து அட்டைகளை, ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய நிறுவனங்களுக்கும், சுப்ரடோ போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் வழங்கினார்.
நிறைவில், எல்.கே.மேனிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், அணித்தலைவர் முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
பள்ளி தாளாளர்
பேட்டியைக் காண
படத்தின் மீது
சொடுக்குக:-
தலைமையாசிரியர்
பேட்டியைக் காண
படத்தின் மீது
சொடுக்குக:-
அணித்தலைவர்
பேட்டியைக் காண
படத்தின் மீது
சொடுக்குக:-
பின்னர், வீரர்கள் - மேலாளர் - பயிற்சியாளர் உள்ளிட்ட அணியினருடன் அனைவரும் குழுப்படங்கள் எடுத்துக்கொண்டனர். படங்கள் வருமாறு:-
[படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
இவ்விழாவில், ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினர், விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்கள், சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடச் செல்லும் வீரர்களின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இன்றிரவு 07.15 மணிக்கு செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலம் வீரர்கள் புறப்பட்ட படக்காட்சிகள்:-
அணியினருக்கு, நேற்று மாலையில் - பல்வேறு நிறுவனங்கள் சார்பில் விளையாட்டுடை உள்ளிட்ட உகரணங்கள் வழங்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுப்ரடோ கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மாநிலம் சார்பில் பங்கேற்கும் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினர்:-
படங்களில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
மற்றும்
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
|