பெரிய நெசவு தெரு, எல்.கே.லெப்பை தம்பி சாலை வழியாக ஒரு வழிப்பாதையில் சாலையை புதுப்பிக்க சமீபத்தில் - திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதனை தொடர்ந்து, பேரூந்துகள் உட்பட கனரக வாகனங்கள் செல்லும் இவ்வழியில், தாயிம்ப்பள்ளி அருகே உள்ள பாலம், பழுதடைந்துள்ளதால், அதனை புதுப்பிக்க 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியும், சில புறநகர் பகுதிகளில் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய 75,000 ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியும் நேற்று (செப்டம்பர் 28) நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 வரை பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் - அன்று மாலை 3:30 மணி அளவில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|