காயல்பட்டினம் ஜாவியாவில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 149ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் இம்மாதம் 22ஆம் தேதியன்று துவங்கி 28ஆம் தேதி (இன்று) வரை ஜாவியா வளாகத்தில் நடைபெறுகிறது. நிகழ்முறை வருமாறு:-
கந்தூரி நாளான இன்று காலையில் யவ்முல் இல்ம் - கல்வி தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மார்க்க அறிஞர்களும், ஜாவியா அரபிக்கல்லூரியின் மாணவர்களும் உரையாற்றுகின்றனர்.
அதிகாலையில் வழீஃபா திக்ர், கத்முல் குர்ஆன் நிகழ்ச்சிகளும், மாலையில் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் வழீஃபா யாக்கூத்திய்யா எனும் ஸலவாத் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் திக்ர் ஹல்காவும் நடைபெறுகிறது.
இவற்றைத் தொடர்ந்து, காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் துணை முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ சிறப்புரையாற்றுகிறார். நேர்ச்சை வினியோகத்தைத் தொடர்ந்து, துஆ ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறும்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் - உலகம் முழுவதிலுமுள்ள பொதுமக்கள் கேட்கும் வகையில், www.ustream.tv/channel/zaviakayal என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படவுள்ளதாகவும், அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் ஜாவியா நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.A.ஸெய்யித் முஹம்மத்
ஜாவியாவின் ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 148ஆவது (கடந்தாண்டு) நினைவுநாள் நிகழ்ச்சிகள் அறிவிப்பு அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|