தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காயல்பட்டினம் கிளை சார்பாக பிறை ஆய்வரங்கம்! அக்டோபர் 8 செவ்வாய்க்கிழமை அன்று ஜாமிவுத் தவ்ஹீத் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 வரை நடைபெறும் இவ்வாய்வரங்கத்திற்கு U.அப்பாஸ் (தூத்துக்குடி மாவட்ட தலைவர், TNTJ) தலைமை தாங்குகிறார்.
ஜாமிவுத் தவ்ஹீத் ஜும்மா பள்ளி கதீப் A. அப்துல் மஜீத் உமரி - பிறை விசயத்தில் ஹதீஸை மறுப்போர் யார்? என்ற தலைப்பில், தலைமை உரை நிகழ்த்துகிறார்.
"உங்கள் கேள்விகளும்? எங்கள் பதில்களும்"! என்ற தலைப்பில் M A .பக்கீர் முகம்மது அல்தாஃபி (TNTJ மேலான்மைகுழு உறுப்பினர்) உரை நிகழ்த்துகிறார்.
நகர கிளை செயலாளர் A.S. முஹம்மது மக்கீ நன்றி உரை நிகழ்த்துவார்.
கீழ்க்காணும் கேள்விகள் உட்பட பிறை குறித்த அனைத்து கேள்விகளுக்கு ஆய்வரங்கில் நேரடியாக பதில் வழங்கப்படும் என இவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
# முஸ்லிம்களின் பெருநாள் மட்டும் ஏன் மூன்று? நாட்கள் என்ற வியப்புக்குறிக்கும்!!! வினாக்குறிக்கும்??? குர்ஆன் சுன்னாவின் ஒளியில் விடை காண்போம்!
# மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த குரானுக்கும் ஹதீஸுக்கும் மாறுப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்ற மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!
# சர்வதேசபிறை என்ற பெயரில் பல சந்தர்ப்பவாதத்தையும், அரஃபாவில் ஹாஜிகள் கூடும் நாளில்தான் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் ஹதீஸ் சரியா ?
# நாளின் ஆரம்பம் .......சுபுஹா ? மஃரிபில் பிறையை பார்ப்பது மார்க்கச்சட்டமா ?
# சூரியன் சந்திரன் உதயமாகும் திசை எது ?
# பிறை பார்க்க வேண்டும் எனும் ருஃயத் என்ற வார்த்தைக்கு "கண்களால் பார்க்க வேண்டும்" என்று அர்த்தம் கொள்ள என்ன ஆதாரம் ?
# பிறை பார்ப்பது சம்மந்தமாக வரும் ஹதீஸ் பற்றிய நிலை என்ன ?
# ஒரு மாதத்தின் முதல்நாளுக்குரிய பிறையை எந்த நாளில் எந்த திசையில் பார்க்க வேண்டும்?
# உலக முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை என்ற ஒரேநாளுக்குள் தொழுவதைப் போல பொருநாள் தொழுகையையும் பெருநாள் தினத்தில் ஒரே நாளுக்குள் தொழமுடியும் என்று சொல்வது குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியா ?
மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் முகவரியை தொடர்பு கொள்ளளவும்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
காயல்பட்டினம் கிளை சார்பாக ஜாமிவுத் தவ்ஹீத்,
233 அலியார் தெரு,
காயல்பட்டினம்.
04639 - 283 567
99527 90849, 94436 60429
e-mail: masjidthavheed@gmail.com
தகவல்:
‘தேக்’ முஜீப் |