தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசின் அவலங்களைக் கண்டித்து, காயல்பட்டினம் நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பரப்புரைப் பொதுக்கூட்டம், இம்மாதம் 01ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கட்சியின் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இளைஞரணி நகர அமைப்பாளர் பி.எம்.அப்துல் காதர் முன்னிலை வகித்தார். 13ஆவது வட்ட செயலாளர் ஆர்.எஸ்.கணபதி வரவேற்றுப் பேசினார்.
அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.கே.பூபதி, என்.பி.ஜெகன், ஆர்.ஆனந்த சேகரன், ஜெ.ஜெயக்குமார் ரூபன், கட்சியின் காயல்பட்டினம் நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு உள்ளிட்ட - கட்சியின் நிர்வாகிகள், பேச்சாளர்கள் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் ஆரணி மாலா, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், ஆளும் அதிமுக அரசின் அவலங்களைக் கண்டித்து சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் கட்சியினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர் செய்திருந்தனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ |