தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 08ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று பிறை குறித்த ஆய்வரங்கம் நடைபெறமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி, ஒருநாள் முற்கூட்டியே - அதாவது அக்டோபர் 07ஆம் தேதி திங்கட்கிழமையன்று மாலை 05.00 மணி முதல், இரவு 10.00 மணி வரை, காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக, அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:...பிறையே நீ மறையாதே.. posted bymackie noohuthambi (colombo)[03 October 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30516
பிறை படும் பாடு. வாய் இருந்தாலும் அது அழுது விடும்.நோன்பு ஹஜ்ஜு காலங்கள் வந்தால் முன்பெல்லாம் அமல் செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இப்போது பிறை பிறக்கும்போதே வில்லங்கம் ஆரம்பமாகி விடுகிறது. அமல் செய்வதில் உள்ள ஆர்வம் குறைந்து பிறை சரியாக பிறக்கிறதா என்ற ஆராய்ச்சி அதிகமாகி விட்டது. அல்லாஹ்வை நம்புவதை விட அவன் படைப்பான பிறை சரியாக பிறக்கிறதா, அதன் கணக்கு சரியாக கணக்கிடப்படுகிறதா என்ற கவலை அதிகமாகி விட்டது.
ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். நாம் எப்படி பிறையை கணக்கிட்டாலும் நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காக என்று இல்லாமல் உம்மத்துக்களை குழப்புவதற்கு என்று ஆகி விட்டால், நான் சரி நீ தப்பு என்ற விவாதங்கள் முன்னெடுத்து செல்வது அதிகமாகி விட்டால், யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை அதிகமாகிவிட்டால். நமது அமல்கள் முகத்தில் பழைய துணியை சுருட்டி எறிவது போல் எறியப்படும் என்ற நபி மொழியை ஞாபகத்தில் வைத்து நாம் அமல் செய்ய முற்படுவோம்.
மக்கா வெற்றியின் போது, வெற்றி திருமகனாக கம்பீரமாக வீறு நடை போடவேண்டிய நபிகள் நாயகம் அவர்கள் கூனிக் குறுகிப் போய், தனது ஒட்டகத்தில் அமர்ந்து மக்காவை சென்று அடைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
நபியே, அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் உங்களை வந்தடையும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் காண்பீர்கள். அப்போது நீங்கள் அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழ்ந்து அவனிடம் பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மிகவும் மன்னிக்க கூடியவனாக இருக்கிறான்.
வழிகாட்டும் உலமாக்களே, மக்கள் விழிதிறக்க வைக்கும் உலமாக்களே, நாம் பலவாறாக பிரிந்து நிற்பது உங்களால்தான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. நாளை மறுமையில் உங்களை பார்த்து நாங்கள் கையை காட்டும்போது அல்லாஹ் உங்களை கூப்பிடும்போது, கேள்வி கேட்கும்போது, அதற்கான விடையை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். வீண் சர்ச்சைகளில் நீங்களும் ஈடுபட்டு எங்களையும் அதற்குள்ளே இழுத்துப்போட்டு வேடிக்கை பார்க்காதீர்கள். அல்லாஹ் எதிர்வரும் புனித ஹஜ்ஜு மாதத்தில் நல் அமல்கள் செய்யும் கூட்டத்தில் நம் எல்லோரையும் ஆக்கி வைப்பானாக. மாறாக தர்க்கம் செய்து கொண்டே அந்த நாட்களை வீணாக்கிவிடும் கூட்டத்தை விட்டும் நம்மை பாதுகாப்பானாக
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக லக லப்பைக்,.இன்னல் ஹம்த வன் னிஉமத லக வல் முல்க் லா ஷரீக லக லப்பைக்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross