தமிழகம் முழுவதும் 10 துணை ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். திருச்செந்தூருக்கு புதிய ஆர்டிஒவாக தமிழ்ராஜன் - இதுவரை பணியாற்றிவந்த கொங்கனுக்கு பதிலாக - நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ள நிலையில் வருவாய் துறையில் துணை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது புதிதாக 10 துணை ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணை ஆட்சியர்கள் விவரம் வருமாறு:
விழுப்புரம் கலால் துறை உதவி ஆணையராக பணியாற்றிய கார்த்திகேயன் கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றிய சரவணன் விழுப்புரம் கலால் துறை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட வழங்கல் அலுவலர் வசந்தி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக (சில்லறை விற்பனை) மாற்றப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராஜ் பழநி ஆர்டிஓவாகவும், தமிழ்நாடு காதி மற்றும் கிராம கைவினை பொருட்கள் வாரிய தலைமை செயல் அலுவலரின் நேர்முக உதவியாளர் உத்தமன் பரமக்குடி ஆர்டிஓவாகவும், விழுப்புரம் சிறப்பு திட்ட அமலாக்க துணை ஆட்சியர் ரங்கநாயகி சங்கரி ஆர்டிஓவாகவும், ஈரோடு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சரசுவதி உடையார்பாளையம் ஆர்டிஓவாகவும்-
மதுரை சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஆறுமுகநயினார் மதுரை ஆர்டிஓவாகவும், திருவாரூர் சிறப்பு திட்ட அமலாக்க முன்னாள் துணை ஆட்சியர் தமிழ்ராஜன் திருச்செந்தூர் ஆர்டிஓவாகவும், புதுக் கோட்டை சிறப்பு திட்ட அமலாக்க முன்னாள் துணை ஆட்சியர் சீனிவாசன் நெல்லை ஆர்டிஓவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross