| |
செய்தி எண் (ID #) 11987 | | | வெள்ளி, அக்டோபர் 4, 2013 | காயல் ஓமன் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2563 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
காயல் ஓமன் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் K.S.H. அப்துல் காதர் இல்லத்தில் செப்டம்பர் 27 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது காயல் ஓமன் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் அவர்களின் இல்லத்தில் வைத்து சென்ற 27 வெள்ளிகிழமை மாலை 5.30 மணியளவில் நடை பெற்றது.
1) முதலாவதாக மன்றத்தின் செயலாளர் பேராசிரியர் ஜனாப் ஹமீத் சுலைமான் அவர்களின் மாமனார் மர்ஹூம் ஜெ. அக்பர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மர்ஹூம் அவர்களின் மக்பிரதிர்காக துவா செய்யப்பட்டது.
2) அடுத்தபடியாக மன்றத்தின் பொருளாளர் ஜனாப் S A C இஸ்மாயில் சூபி அவர்கள் பணி மூப்பு அடிப்படையில் தாயகம் செல்ல இருப்பதால், அவருக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவத்து தீர்மானம் நிறைவேற்றப் பெற்றது.
3) புதிய பொருளாளராக ஜனாப் சலீம் அல்தாப் அவர்களை மன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் ஒருமனதாக தேர்ந்து எடுக்க பட்டது.
4) மன்றத்தின் நடப்பு பொருளாளர் S A C இஸ்மாயில் சூபி (தொலைபேசி +91 95975 01927) அவர்களை உள்ளூர் பிரதிநிதியாக நியமிக்க மன்றக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பரிந்துரை செய்தார்கள். மன்ற உறுப்பினர் அனைவர்களும் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர்.
5) மக்ரிபு இடை வேளைக்குப் பிறகு மீண்டும் கூட்டம் தொடர்ந்தது. ஜனாப் இஸ்மாயில் சூபி அவர்கள் வரவு செலவு கணக்குகளை மன்றத்தில் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் புதிதாக தேர்ந்து எடுக்கப் பட்ட பொருளாளர் ஜனாப் சலீம் அல்தாப் அவர்களிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு, தான் பொருளாளராக இருந்த போது ஒத்துழைப்பு செய்த மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
6) கடைசியாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இவ்வாறு, காயல் ஓமன் நல மன்றத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தகவல்:
தலைவர் மற்றும் உதவி செயலாளர்,
காயல் ஓமன் நற்பணி மன்றம்,
மஸ்கட், ஓமன்.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|