இந்திய அரசாங்க ஹஜ் குழு மூலமும், தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமும் ஹஜ் பயணியர் தற்போது - சவுதி அரேபியா சென்ற வண்ணம் உள்ளனர். அனைத்து பயணியரும் நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இருந்து சவுதி அரேபியா செல்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கப்பல் வழி பயணம் மட்டுமே சாத்தியமாக இருந்தது. விமானங்களின் அறிமுகத்திற்கு பிறகு கப்பல் வழி பயணியர் எண்ணிக்கை குறைய துவங்கியது. 1990 - 1994 காலகட்டத்தில் சவுதி அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 24,000 பயணியர்களில் சுமார் 4700 பேர் கப்பல் மூலமே பயணம் மேற்கொண்டனர். 1995 ஆம் ஆண்டு முதல் கப்பல் பயணம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
1983 ஆம் ஆண்டு வரை, அனைத்து பயணியரும் மும்பை நகரில் இருந்தே தங்கள் ஹஜ் பயணத்தை துவக்கினர். 1983 ஆம் ஆண்டில் இருந்து புது டில்லியில் இருந்தும், 1987 ஆம் ஆண்டு சென்னையில் இருந்தும் என பல்வேறு நகரங்களில் இருந்து சேவைகள் படிப்படியாக துவக்கப்பட்டன. தற்போது 21 இந்திய நகரங்களில் இருந்து ஹஜ் பயணியர், சவுதி அரேபியாவிற்கு விமானங்களில் ஏற்றி செல்லப்படுகின்றனர்.
1. ஹஜ் செலவின் பரிமாண வளர்ச்சி ? posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[05 October 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 30537
ஹஜ் பரிமாண வளர்ச்சியில் முக்கியமான விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். 1983 ல் எவ்வளவு செலவு , 2013 ல் எவ்வளவு செலவு , ஹஜ் கமிட்டி மூலம் எவ்வளவு, தனியார் டிராவல்ஸ் மூலம் எவ்வளவு போன்ற விவரங்களையும் குறிப்பிட்டிருந்தால் ஹஜ் செலவின் பரிமாண வளர்ச்சி புரிந்திருக்கும்.
தனியார் டிராவல்ஸ் மூலம் சென்ற வருடம் ரூ 240,000. இந்த வருடம் ரூ 420,000 என கேள்விப்படுகிறேன் .
விமான முனையங்களை பொருத்தவரையில்,ஒரு சில மாநிலங்களில் 2 முனையங்கள் வரை பயன்படுத்தும்போது , தமிழ் நாட்டில் வெறும் சென்னை மட்டும் போதாது.
இனிவரும் காலங்களில் மதுரையிலிருந்தும் ஹஜ் புறப்பாடு வசதி ஏற்படுத்திகொடுத்தால் 8 தென் மாவட்ட மக்கள் பயனடைவர். இஸ்லாமிய இயக்கங்கள்/தலைவர்கள் இதுவிஷயமாக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross