காயல்பட்டினம் நகராட்சி - 1976 ம் ஆண்டு டவுன் பஞ்சாயத்து தகுதியில் இருந்தது. அப்போது திருச்செந்தூர் தாசில்தாராக இருந்த வேலாயுதம் என்பவர் - 30க்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் (மொத்த பரப்பளவு: 29 ஏக்கர் 13 சென்ட்), காயல்பட்டினம் வடபாகம் கிராமத்திலிருந்து டவுன் பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கையெழுத்திட்டு ஊர்ஜிதம் செய்த ஆவணம் கீழே:
அதே ஆண்டில் - காயல்பட்டினம் தென்பாகம் கிராமத்திலிருந்து 42.68 ஏக்கர் நிலம், காயல்பட்டினம் பஞ்சாயத்திற்கு வழங்கப்பட்டது. அதன் விபரங்களை காண இங்கு அழுத்தவும்.
இந்த நிலங்களில் பலவும் தற்போது காயல்பட்டினம் நகராட்சியின் வசம் இல்லை என கூறப்படுகிறது.
1. பூனைக்கு யார் மணி கட்டுவது.... என்ற குழப்பத்தில் பிறர் (தனி நபர்கள்) பயன் அடைந்து வருகிறார்கள் என்பது வேதனையான செய்தி...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30543
பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்பட்டதாக சொல்லும் தகவலின் அடிப்படையில் 29 ஏக்கர் 13 சென்ட் + 42 ஏக்கர் 68 சென்ட் = ஆக மொத்த பரப்பளவு: 71 ஏக்கர் 81 சென்ட் திருச்செந்தூர் தாசில்தாராக இருந்த வேலாயுதம் அவர்கள் வழங்கிய அரசு புறம்போக்கு நிலங்கள் தற்போது நகரில் எங்கே உள்ளது...? பஞ்சாயத்தின் கைவசமா...? (அல்லது) காலபோக்கில் நகரின் தனி நபர்களின் கைவசமா....?
இந்த ஆவணங்களின் அடிப்படையில் இதை ஏன் நகர்மன்றம் சார்பில் அரசு துறைக்கு அறிவித்து விசாரணை மேற்கொள்ள கூடாது என்ற கேள்வி என் போன்றவர்களின் மனதில் எழுகிறது...! இது விசியத்தில் நகர் மக்கள் மற்றும் பல பொது அமைப்புகள் விழிப்புணர்வு பெற்று அரசு துறைக்கு தகவல் கேட்டு மனு அனுப்பினால் காலம் கடந்தாவது இதற்க்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கலாம்...!
71 ஏக்கர் 81 சென்ட் யார் அதிகாரத்தில் உள்ளது... என்ற கேள்விக்கு விடை தான் என்ன...? பூனைக்கு யார் மணி கட்டுவது.... என்ற குழப்பத்தில் பிறர் (தனி நபர்கள்) பயன் அடைந்து வருகிறார்கள் என்பது வேதனையான செய்தி...!
2. வடிவேலு ஸ்டைல்...! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[05 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30544
ஒரு திரைப்படத்தில் கிணற்றைக் காணோன்னு வடிவேலு போலீஸில் கம்ளைண்ட் கொடுத்த மாதிரி நிலத்தைக் கோணோம்னு நாமும் ஒரு கம்ளைண்ட் கொடுக்கணும். அப்பதான் சரி வரும் போலே...ம்...எந்த புன்னியவான் இந்த சொத்துக்களை அனுபவிக்குறானோ...? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross