| |
செய்தி எண் (ID #) 11986 | | | வெள்ளி, அக்டோபர் 4, 2013 | சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் காயல்பட்டினம் மாணவி! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3380 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் தைக்கா தெருவை சார்ந்த TMSO பாத்திமா ஜமீலா - சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் BDS பட்டம் பெற்றார். தமிழகத்தின்
ஒரே அரசு பல் மருத்துவ கல்லூரியான சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெறும் முதல் காயல்பட்டினம் மாணவி இவர் ஆவார்.
இவர் தைக்கா தெரு ஹாஜி உமர் (ஜித்தா,சவுதி அரேபியா) - SOB பிர்தௌசியா ஆகியோரின் மகளும், காலஞ்சென்ற SO புஹாரி ஹாஜியின்
(முன்னாள் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை) மகள் வழி பேத்தியும், காலஞ்சென்ற தைக்கா சதக் அப்பாவின்
மகன் வழி பேத்தியும் ஆவார்.
அக்டோபர் 3 வியாழனன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் - பாத்திமா ஜமீலா உட்பட 85 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அவ்வேளையில் காயல்
மாணவி - BEST OUTGOING STUDENT சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் கல்லூரியில் பயிலும் போது மாணவர் பேரவையின் அறிவியில் குழு (SCIENTIFIC COMMITTEE) உறுப்பினராகவும் இருந்தார்.
பழைய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் சுகாரத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமை விருந்தினராக
கலந்துக்கொண்டு பட்டங்களை வழங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சாதிக் நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினார்க்க கலந்துக்கொண்டார். கல்லூரியின் பிரின்சிபால் KSGA நாசர் MDS, Phd, தலைமை தாங்கினார்.
பட்டம் பெற்ற காயல் மாணவிக்கு - சென்னை வாழ் காயலர், அவர் குடும்பத்தினர் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தகவல்:
ஹாஜி யூசுப் சாஹிப் (+91 73056 60581),
கன்வீனர், காயல் உயர்கல்வி மேம்பாட்டு மையம்,
காயல்பட்டணம். |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|